Home /virudhunagar /

சுற்றுலா பயணிகளை கவரும் திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த வீடு.. 

சுற்றுலா பயணிகளை கவரும் திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த வீடு.. 

திருச்சுழி

திருச்சுழி - ரமண மகரிஷி பிறந்த வீடு 

Ramana Maharishi Home at Virudhunagar | வரலாற்று பெருமை மிக்க விருதுநகர் மாவட்டம் அரசியலுக்கு காமராஜரையும்,ஆன்மிகத்திற்கு ரமணரையும் தந்துள்ளது. திருச்சுழியில் உள்ள ரமண மகரிஷி பிறந்த வீடு அதிக சுற்றுலா பயணிகளை கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
திருச்சுழியில் உள்ள ரமண மகரிஷி பிறந்த வீடு அதிக சுற்றுலா பயணிகளை கவனம் ஈர்த்து வருகிறது. இதனால் இங்கு தினசரி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருச்சுழியில் திருமேனி நாதர் கோவிலுக்கு அருகில் உள்ளது இந்த  ரமண மகரிஷி பிறந்த வீடு.

யார் இந்த ரமண மகரிஷி?

1879- 1950 கால கட்டத்தில் வாழ்ந்த  ரமணர் மிகவும் புகழ்பெற்ற ஆன்மிகவாதியாக திகழ்ந்தார். வரலாற்று பெருமை மிக்க விருதுநகர் மாவட்டம் அரசியலுக்கு காமராஜரையும், ஆன்மிகத்திற்கு ரமணரையும் தந்துள்ளது.

1879 டிசம்பர் 30ல் திருச்சுழியில் சுந்தராமய்யர் அழகம்மை தம்பதியருக்கு இளைய மகனாய் பிறந்தார்.‌ இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர் மதுரையில் இருக்கும் சித்தப்பா வீட்டில் இருந்து படித்து வந்தார். அப்போது அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாகி அதுவே அவரின் ஆன்மிக நாட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

ரமண மகரிஷி


ஒரு நாள் நான் யார் என்ற கேள்வி எழ வீட்டை விட்டு வெளியேறி அதற்கான விடை தேடி இறுதியில் திருவண்ணாமலையில் ஞானம் பெற்றார். பிற்காலத்தில் அங்கேயே ஆசிரமம் அமைத்து ஆன்மிக பணியாற்றினார்.இன்றும் இவரின் ஆசிரமம் அங்கு செயல்பட்டு வருகிறது.

ரமண மகரிஷி பிறந்த வீடு


ரமணர் பிறந்த வீடு

திருச்சுழியில் இவர் பிறந்த பழைய வீடு இடிக்கப்பட்டு தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இங்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி