முகப்பு /விருதுநகர் /

திருச்சுழி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

திருச்சுழி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

X
திருச்சுழி

திருச்சுழி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா! 

Virudhunagar Tiruchuli Mariamman Temple | அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி ஏந்தி அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைத்து புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  மாசித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு திருவிழாவானது கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 3 ஆம் தேதி நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக வந்து கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கையில் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டதால் திருச்சுழி பகுதியானது விழாக்கோலம் பூண்டது.

First published:

Tags: Local News, Virudhunagar