ஹோம் /விருதுநகர் /

துவரம் பருப்பு, கடலை எண்ணெய் விலை குறைந்தது - விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

துவரம் பருப்பு, கடலை எண்ணெய் விலை குறைந்தது - விருதுநகர் மார்க்கெட் நிலவரம்

துவரம் பருப்பு

துவரம் பருப்பு

Virudhunagar District | பிரபல விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு 100 கிலோ மூடை ரூ.300 விலை குறைந்து ரூ.9,500 முதல் ரூ.10,900 வரையில் விற்பனையானது. இதேபோல கடலை எண்ணெய் விலையும் குறைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த வாரம் துவரம் பரப்பு, கடலை எண்ணெய், சீனி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, துவரை 100 கிலோ மூடை ரூபாய் 6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.300 விலை குறைந்து 9,500 ரூபாய் முதல் ரூ.10,900 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோ ரூ.4,900 முதல் ரூ.5,100 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை ஆனது. முண்டு வத்தல் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29,500 வரையிலும் விற்பனையானது.

உளுந்து 100 கிலோ மூடை 7,500 ரூபாய் முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,800 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,400 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப் பருப்பு 100 கிலோ மூடை 9,600 ரூபாய் ஆகவும், பாசிப்பயறு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9,500 வரையிலும் விற்பனையானது.

கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு 50 ரூபாய் விலை குறைந்து ரூ.3 ஆயிரம் ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.5,610 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.70 விலை குறைந்து ரூ.1,620 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.500 விலை குறைந்து ரூ.4,400 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2,100 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை குறைந்து ரூ.3,800 ஆகவும், கொண்டைக்கடலை ரூ.300 விலை குறைந்து குவிண்டால் ரூ.4,900 ஆகவும் விற்பனை ஆனது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொரிகடலை 50 கிலோ ரூ.3,950 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4,220 ஆகவும், 2ஆம் ரகம் ரூ.3,560 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,050 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,450 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.950 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.6,800 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.6,800 ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,100 ஆகவும் விற்பனையானது.

Must Read :தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.21,600 ஆகவும், ஏ ரகம் ரூ.21,500 ஆகவும், சி ரகம் ரூ.19,500 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.9,800 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூபாய் 8 ஆயிரமாகவும் விற்பனை ஆனது.

Published by:Suresh V
First published:

Tags: Cooking Oil, Local News, Sugar, Virudhunagar