ஹோம் /விருதுநகர் /

அஜித் கெட்டப்பில் துணிவு படம் பார்க்க வந்த விருதுநகர் ரசிகர்.. FDFS எப்படி இருந்துச்சு?

அஜித் கெட்டப்பில் துணிவு படம் பார்க்க வந்த விருதுநகர் ரசிகர்.. FDFS எப்படி இருந்துச்சு?

X
துணிவு

துணிவு தான் மாஸ்  அஜித் கெட்டப்பில் வந்த விருதுநகர் ரசிகர் 

Ajith Lookalike fan at Virudhunagar | நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜீ ஸ்டுடியோ மற்றும் போனி கபூர் இனைந்து தயாரித்துள்ளது. பொதுவாக அஜித் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரீச் இருக்கும் நிலையில் வெளியான ட்ரைலரில் மங்காத்தா போன்று நெகடிவ் சாயல் தெரிந்ததால் ரசிகர்கள் இன்னொரு மங்காத்தா போல மாஸா இருக்கும் என்று கருதினர். இந்த நிலையில் துணிவு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெகடிவ் ரோல் :

விருதுநகரில் படம் பார்த்த ரசிகர்கள் பலர் நடிகர் அஜித் நடித்த ரோல்களிலே இது தான் பெஸ்ட் என்றும், நடிகர் அஜித் நெகடிவ் மற்றும் நக்கலான ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தனர்.

நடிகர் அஜித் போன்ற சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்டப்பில் வந்த ரசிகர் ஒருவர் படம் தாறுமாறாக மாஸ்ஸாக உள்ளது என்றும் 2023 ம் ஆண்டின் சிறந்த படமாக துணிவு தான் இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் இனி வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Ajith fans, Local News, Thunivu, Virudhunagar