முகப்பு /விருதுநகர் /

திருத்தங்கல் நகராட்சியா? மாநகராட்சியா? பழைய பெயர் பலகைகளால் நிலவும் குழப்பம் 

திருத்தங்கல் நகராட்சியா? மாநகராட்சியா? பழைய பெயர் பலகைகளால் நிலவும் குழப்பம் 

X
திருத்தங்கல்

திருத்தங்கல் பழைய பெயர் பலகை

Virudhunagar | திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது உள்ள பழைய பெயர் பலகை மாற்றப்படாததால் குழப்பம் நிலவுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

திருத்தங்கல், சிவகாசி மாநகராட்சியோடு இனைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் பழைய நகராட்சி பெயர் பலகைகள் இன்னும் மாற்றப்படாமல் இருப்பதால் திருத்தங்கல் நகராட்சியா அல்லது மாநகராட்சியின் பகுதியா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றப்படும் என கடந்த 2021 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் 2021 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை படி சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல்நகராட்சி இந்த இரண்டு நகராட்சிகளும் ஒருங்கினைக்கப்பட்டு,2022 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைபடி சிவகாசி திருத்தங்கல்பகுதியோடு சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது சிவகாசி,மாநகராட்சியாக செயல்பட்டு வரும் நிலையில், திருத்தங்கல்அதில் ஒரு மண்டலமாக இருந்து வருகிறது. ஆனாலும் திருத்தங்கல்பகுதிகளில் இன்னும் பழைய திருத்தங்கல்நகராட்சி பெயர் பலகைகள் மாற்றப்படாமல் இருப்பதால் திருத்தங்கல் நகராட்சியா? மாநகராட்சியா? என்பதில் குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய திருத்தங்கல்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்பாலசுப்பிரமணியம், ’பெயர் பலகை மட்டுமல்ல திருத்தங்கல்மாநகராட்சியோடு இனைக்கப்பட்ட பின்னர், திருத்தங்கல்பகுதியில் சாலை வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்கிறார்.

விருதுநகர் | கோவில் பிரச்சனை காரணமாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சிவகாசி மாநகராட்சியான பின்னரும் இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஓர் ஆண்டாகியும் பெயர் பலகை கூட மாற்றாமல் இருப்பதுமாநகராட்சி செயல்பாட்டின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar