ஹோம் /விருதுநகர் /

Virudhunagar News : திருத்தங்கல் வரலாற்றை விளக்கும் ஆய்வு நூல் விருதுநகரில் வெளியீடு..

Virudhunagar News : திருத்தங்கல் வரலாற்றை விளக்கும் ஆய்வு நூல் விருதுநகரில் வெளியீடு..

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar News : விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தினர்,பாண்டியர் கால வரலாற்று சுவடுகளை நூல்களாக தொகுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில், விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பேசிய அமைச்சர் பெருமக்கள், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் பதிப்பித்த பிரான்மலை கல்வெட்டுகள், பாண்டிய நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள், திருத்தங்கல் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் என்ற மூன்று புதிய வரலாற்று நூல்களை வெளியிட்டனர். மேலும் அதனை தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Virudhunagar