ஹோம் /விருதுநகர் /

பேருந்தே வராததால் வீணாகி வரும் திருத்தங்கல் பேருந்து நிலையம்..  

பேருந்தே வராததால் வீணாகி வரும் திருத்தங்கல் பேருந்து நிலையம்..  

திருத்தங்கல்

திருத்தங்கல் பேருந்து நிலையம்

Virudhunagar News | விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயனற்று காணப்படுகிறது. விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர்  மாவட்டத்தின் திருத்தங்கல் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயனற்று காட்சி பொருளாக நிற்கிறது. பேருந்து நிலையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தங்கல் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விருதுநகர் - சிவகாசி சாலையில் பேருந்து நிலையத்துக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 3 கோடி என கூறப்படும் நிலையில் இந்த பேருந்து நிலையத்தை அன்றைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தொடக்க காலத்தில்  பேருந்துகள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து சென்றுள்ளன. ஆனால் நாட்கள் செல்ல  செல்ல, பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டு தற்போது பயணிகளை சாலையில் இறங்கி விட்டு செல்கின்றன.

திருத்தங்கல் பேருந்து நிலையம்

இதனால்  பேருந்து நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப்பொருள் உபயோகித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் புகலிடமாகவும் மாறியுள்ளது.

என்ன தான் பிரச்சனை?

திருத்தங்கல் பேருந்து நிலையம், சாலையில் இருந்து சில மீட்டர்கள் உள்ளே தள்ளி உள்ள நிலையில், பேருந்துகள் சாலையில் இருந்து இறங்கி உள்ளே சென்று பயணிகளை இறக்கி விட்டு செல்ல சில நிமிடங்கள் ஆகும், இதனால் டைமிங் பிரச்சனை ஏற்பட்டதால் பேருந்துகள் உள்ளே வருவதை குறைத்துவிட்டன என்று கூறப்படுகிறது.

திருத்தங்கல் பேருந்து நிலையம்

இது குறித்து திருத்தங்கலை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் நம்மிடையே பேசும்போது,  “அதிகாரிகள் தங்கள் பணியை சரிவர செய்யாததே இதற்கு காரணம். மேலும் தற்போது திருத்தங்கல், சிவகாசியுடன் சேர்த்து மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்ட போது  திருத்தங்கல்லில் பாலம் வந்த உடன் பேருந்து நிலையம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கூறியதாக தெரிவித்தார்.

திருத்தங்கல் பேருந்து நிலையம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருத்தங்கல் பேருந்து நிலைய  விவகாரத்தில், மக்களின் வரிப்பணம் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar