Home /virudhunagar /

பாண்டிய நாட்டின் ஒரே பள்ளிப்படை.. சுந்தரபாண்டியன் மன்னன் புதைக்கப்பட்ட திருச்சுழி கோவில்.. விருதுநகர் மண்ணில் ஒரு வரலாற்று சின்னம்

பாண்டிய நாட்டின் ஒரே பள்ளிப்படை.. சுந்தரபாண்டியன் மன்னன் புதைக்கப்பட்ட திருச்சுழி கோவில்.. விருதுநகர் மண்ணில் ஒரு வரலாற்று சின்னம்

விருதுநகர்

விருதுநகர் - திருச்சுழி பாண்டிய மன்னரின் பள்ளிப்படை

Thiruchuli Pallimadam Shivan Temple | விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் பாண்டிய மன்னனின் பள்ளிப்படை ஒன்று உள்ளது. பள்ளிப்படை என்றால்  என்ன, இதன் சிறப்புகள் குறித்து அலசுகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் உயிர் நீத்த பிறகு அவர்களை மண்ணில் புதைத்து அவற்றின் மேல் சிவாலயம் எழுப்பும் வழக்கம் இருந்தது. இதுவே பள்ளிப்படை என அழைக்கப்பட்டது.   சோழ நாட்டில் பல மன்னர்களின் பள்ளிப்படைகள் காணப்படுகின்றன. ஆனால் பாண்டிய நாட்டில் இந்த ஒரு பள்ளிப்படை மட்டுமே காணப்படுகின்றது.

    பள்ளி மடம்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து நரிக்குடி சாலையில் உள்ளது பள்ளி மடம் எனும் கிராமம். துவக்கத்தில் பள்ளிப்படை என அழைக்கப்பட்டு தற்போது பள்ளிமடம் என மருவியுள்ளது இவ்வூர்.இங்கு தான் புகழ் பெற்ற பாண்டிய நாட்டு பள்ளிப்படை காணப்படுகிறது.

    திருச்சுழி பள்ளிமடம் சிவன் கோவில், விருதுநகர் மாவட்டம்


    பள்ளிப்படை வரலாறு:

    10ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இப்பகுதிக்கு வரும்போது இறந்து விட அவரை குண்டாற்றின் கரையில் புதைத்து அதன் மேல் பள்ளிப்படை எழுப்பினார் அவரது தம்பி வீரபாண்டியன் (இவரை பொன்னியின் செல்வன் புதினத்தில் அறியலாம் இவரின் தலையை தான் ஆதித்த கரிகாலன் வெட்டினார்).

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    பாண்டிய மன்னன் கட்டிய இப்பள்ளிப்படை கோவிலுக்கு திருச்சுழியல் பள்ளிப்படை சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோவில் என பெயர் சூட்டினார்.ஆனால் தற்போது காளநாத சுவாமி கோயில் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பிரம்மாண்ட கோபுரங்கள் சிற்பங்கள் இன்றி எளிய நடையில் பாண்டிய கலைநயத்துடன் அமைந்துள்ளது இக்கோவில். முற்றத்தில் நந்தி மண்டபமும் பலிபீடமும் காணப்படுகிறது.இந்த நந்தி மண்டபத்தின் உட்பகுதியில் பாண்டியர் சின்னமான மீன் சின்னம் காணப்படுகிறது. அதை தாண்டி உள்ளே செல்லும் போது சுந்தரபாண்டியன் புதைக்கப்பட்டு மேலே லிங்கம் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மண்டபத்தை காணலாம்.

    திருச்சுழி பள்ளிமடம் சிவன் கோவில், விருதுநகர் மாவட்டம்


    இது போக சொர்ணவள்ளி அம்மனுக்கு தனி கோவிலையும் பாண்டியர்கள் கட்டியுள்ளனர். இடைக்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் அதன்பின் வந்த பிற்கால பாண்டியர்கள், திருமலை நாயக்கர் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது என கோவில் கல்வெட்டு கூறுகிறது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    தற்போது இராமநாதபுரம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில் ஆள் ஆரவாரமின்றி அமைதியாக காட்சியளிக்கிறது. தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் சிவனுக்கு இருகால பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன.

    கூட்டம் இல்லாத கோவில் என்பதால் திருச்சுழி அருகே உள்ள இங்கு வந்தால் 1,000ம் ஆண்டு சிவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.
    கோவிலுக்கு வர விரும்புவோர் 63836 59713, 94420 60862 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    Thiruchuli Shivan Temple
    திருச்சுழி பள்ளிமடம் சிவன் கோவில், விருதுநகர் மாவட்டம்


    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி