முகப்பு /விருதுநகர் /

திருச்சுழியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை 12 அடி நகர்த்திய விவசாயி... செலவு எவ்வளவு தெரியுமா?

திருச்சுழியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை 12 அடி நகர்த்திய விவசாயி... செலவு எவ்வளவு தெரியுமா?

X
வீட்டை

வீட்டை 12 அடி நகர்த்திய அதிசயம்!!! எப்பூர்றா.....

Virudhunagar News | திருச்சுழியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை 12 அடிக்கு விவசாயி ஒருவர் நகர்த்தியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளதுபனையூர். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன் என்பவரின் வீடு, பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பல ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருந்து வரும் லட்சுமணன் அதை மறுக்கவே இறுதியில் இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்த போது, பார்த்து பார்த்து கட்டிய வீட்டை இடிக்க லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனமில்லை. அப்போது தான் வீட்டை இடிக்காமல் பின்னோக்கி நகர்த்தலாம் என்ற முடிவை கையில் எடுத்துள்ளனர்.

எப்படி சாத்தியம்?

இதற்காக வடஇந்தியாவை சேர்ந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்களை கொண்டு வீட்டின் அடித்தள பகுதியை மட்டும் உடைத்து வீட்டின் சுவர் பகுதியை மட்டும் ஜாக்கிகள் உதவி கொண்டு மெல்ல மெல்ல நகர்த்தியுள்ளனர். தற்போது மொத்தமாக நகர்த்தப்பட்ட இந்த வீட்டிற்கு புதியதாக அடித்தளமிட்டு அதோடு வீட்டை இணைத்துள்ளனர்.

என்ன செலவு?

கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்த இந்த வேலையில் 12 லட்சம் செலவு என்கிறார் வீட்டின் உரிமையாளர் லட்சுமணன்.இந்த வீட்டிற்கு பல ஆண்டுகளாக வரி கட்டி இங்கேயே குடியிருந்து வந்த நிலையில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறுகின்றனர். இறுதியில் நீதிமன்றமும் கைவிட்ட நிலையில் வீட்டையாவது காப்பாற்றலாம் என இந்த முடிவை எடுத்து செய்து முடித்துள்ளதாக தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar