விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் சென்னை, கோவை போன்ற வெளியூர் செல்லும் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பேருந்துகளில் பயணிக்க ஆயிரக்கணக்கான பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் பயன்படுத்துவதற்கென ஒரு இலவச கழிப்பறை கூட இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுவாக இது போன்ற பேருந்து நிலையங்களில் , கட்டண கழிப்பறை மற்றும் இலவச கழிப்பறைகள் காணப்படும்.ஆனால் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறை மட்டுமே உள்ளது.இதனால் பயணிகள் பணம் கொடுத்து கழிப்பறைகளை உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் கட்டண கழிப்பறை களையும் உபயோகிக்காமல் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் புதிய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க உள்ளதாகவும், அப்போது பயணிகளுக்கு ஒரு இலவச கழிப்பறையை ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பேருந்து நிலையம் புதுப்பிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி வெகு நாட்கள் ஆகியும் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.அதனால் இப்போதைக்கு பயணிகள் பயன்படுத்துவதற்கு ஒரு கழிப்பறையை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aruppukkottai Constituency, Local News, Tamil News, Virudhunagar