ஹோம் /விருதுநகர் /

விருதுநகர்- கோலாகலமாக நடைபெற்ற சிவகாசி கிராமிய கலைத்திருவிழா- மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

விருதுநகர்- கோலாகலமாக நடைபெற்ற சிவகாசி கிராமிய கலைத்திருவிழா- மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

X
சிவகாசி

சிவகாசி கிராமியத் திருவிழா

Virudhunagar | சிவகாசி கிராமியத் திருவிழாவில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிராமங்கள் மற்றும் நாட்டுப்புற கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிராமிய கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தினர்.

கிராம கலாச்சாரத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் கிராமிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி 6 ம் தேதி சிவகாசி விஸ்வநத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய கிராமிய திருவிழா ஜனவரி 8ம் தேதி வரை நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த நிலையில், நிகழ்வில் மாணவர்களுக்கு கலை சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கிராம அமைப்பு 

இதற்காக மாணவர்களும் பொதுமக்களும் கிராம கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ள அரங்கில் கிராம கோவில், கிராம குடிசை வீடு, கிராம பெட்டிக்கடை போன்ற மாதிரி குடில்கள் அமைத்து பனையோலைகளால் அரங்கை அலங்கரித்து அந்த இடத்தையே ஒரு மாதிரி கிராமம் போல வடிவமைத்திருந்தனர்.

கிராமக் கோவில் அமைப்பு

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அனைவரும் அன்றைய கிராமம் எப்படி இருந்தது என பார்த்து வியந்து சென்றனர்.

குடிசை வீடு மாதிரி

பரிசுகள்:

கிராமிய திருவிழாவில் புகைப்படம் எடுத்து அதை கிராம குடிசை வீட்டின் முன்பு மாட்டி வைத்தால் அதில் சிறந்த புகைப்படத்திற்கு பரிசு என அறிவித்திருந்தனர். இதன்படி நாள் ஒவ்வொன்றுக்கும் சிறந்த புகைப்படங்களை தேர்ந்தெடுத்து பரிசுளை வழங்கினர். இதே போன்று பழமொழிகளுக்கான போட்டியும் நடத்தப்பட்டு அதற்க்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதைத்தவிர மாணவ, மாணவியர்களுக்கென நாட்டுப்புற கலைகள் சார்ந்த ஒப்பாரி, கும்மி, தாலாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு, அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.ஜனவரி 5 ம் தேதி தொடங்கி மொத்தமாக 4 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழா ஜனவரி 8 ம் தேதியோடு முடிவு பெற்றது.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar