முகப்பு /விருதுநகர் /

விழுந்து கிடக்கும் விருதுநகர் போர்டு.. வழிதெரியாமல் குழம்பும் மக்கள்!

விழுந்து கிடக்கும் விருதுநகர் போர்டு.. வழிதெரியாமல் குழம்பும் மக்கள்!

விருதுநகர் பெயர் பலகை

விருதுநகர் பெயர் பலகை

Viruthunagar News | விருதுநகர் பிஆர்சி டிப்போ அருகே விருதுநகரை அடையாளம் காட்டும் பெயர் பலகை பெயர்ந்து கீழே விழுந்து கிடப்பதால் புதிதாக வருவோர் வழி தெரியாமல் குழம்புகின்றனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

வெளியூரில் இருந்து வருபவர்கள் விருதுநகருக்கு வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக விருதுநகர் மண்டல அலுவலகம் அருகே நெடுஞ்சாலை துறையினர் வைத்த விருதுநகர் பெயர் பலகை பெயர்ந்து விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

இது பற்றி பேசிய அந்த வழியாக சென்ற ஒருவர், இந்த பெயர் பலகை பல நாட்களாக இப்படி தான் உள்ளது என்றும், அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு இது சென்றதா இல்லையா என தெரியவில்லை என்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் எல்லையில் வைக்கப்பட்ட பெயர் பலகை இப்படி சேதமடைந்து கீழே விழுந்து கிடப்பதால்,புதிதாக ஊருக்குள் வருவோர்க்கு விருதுநகருக்கான வழியை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar