ஹோம் /விருதுநகர் /

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதிக்கு சென்றது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதிக்கு சென்றது

விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளுக்கு சூடிய மாலையை திருப்பதி பிரம்மோற்ச விழாவில் பெருமாளுக்கு அணிவிக்க மாலை கொண்டு செல்லும் வைபவம் நடந்தது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாளுக்கு சூடிய மாலையை திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு அணிவிக்க கொண்டு செல்லும் வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் 5ம் நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை நடைபெறும்.

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி ஏழுமலையான் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஏழுமலையானுக்கு மாலை கொண்டு செல்லும் வைபவம் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து ஏழுமலையானுக்கு அணிவிக்கக்கூடிய மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு ஆண்டாள் மாலை, பரிவட்டம், கிளி ஆகியவை பெரிய கூடையில் வைத்து யானை முன்செல்ல பட்டர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது இந்த காட்சிகளை கண்டு ரசிக்க வந்த பக்தர்கள், “கோபாலா, கோவிந்தா, ஏழுமலையானே” என சரண கோஷங்களை எழுப்பியது விண்ணை முட்டியது.

இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ராம்கோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாகனத்தில் வைத்து, மாலை உள்ளிட்டவை திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் ஆண்டுதோறும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, அழகர் ஆற்றில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar