முகப்பு /விருதுநகர் /

பாய்ந்து வருகிறது மின்சார ரயில்... விருதுநகர் மக்களே உஷார்!

பாய்ந்து வருகிறது மின்சார ரயில்... விருதுநகர் மக்களே உஷார்!

விருதுநகர்-தென்காசி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

விருதுநகர்-தென்காசி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

Virudhunagar - Tenkasi Train | விருதுநகர்-தென்காசி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் யாரும் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் - தென்காசி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் யாரும் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னக ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள விருதுநகர் - தென்காசி, தென்காசி - திருநெல்வேலி, தென்காசி - செங்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் தென்காசி - திருநெல்வேலி பணிகள் முழுமையடைந்து கடந்த மார்ச் 13ஆம் தேதி தென்காசி திருநெல்வேலி இடையே மின்சார இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விருதுநகர் தென்காசி ரயில் பாதை பணிகள் முடிந்து மார்ச் 29ஆம் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க : மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

விருதுநகரில் இருந்து ராஜபாளையம் வழியாக தென்காசி வரையிலான மின் வழித்தடத்தில் அதிகாரபூர்வமாக தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால் , பொதுமக்கள் யாரும் சோதனை ஓட்டத்தின் போது ஆளில்லா ரயில்வே க்ராஸ்ஸிங்களில் ரயில் பாதையை கடப்பதை தவிர்விக்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar