ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

டாஸ்மாக்

டாஸ்மாக்

Virudhunagar District News | தேவர் குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

  அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

  Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

  அந்த விழாவுக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும், அந்த வழியாக பிற மாவட்டத்தினரும் செல்வது வழக்கம். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அந்த வகையில், “பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகிற 29ஆம் தேதி மாலை 6 மணி முதல் 30ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Muthuramalinga Thevar, Tasmac, Thevar Jayanthi