முகப்பு /செய்தி /விருதுநகர் / 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த விருதுநகர்!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்த விருதுநகர்!

மாதிரி படம்

மாதிரி படம்

Virudhunagar 10th Results 2023 | 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை தெரிந்து கொள்வோம்.

  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ்நாட்டில், 10ஆம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், 96.22% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 24,919 பேரில், 12,307 ஆண் மாணவர்களும், 12,612  பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 94.76 %, பெண்கள் 97.65% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க | ரிசல்ட் குறித்த லைவ் அப்டேட்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

தேர்வு முடிவுகளை மாணவர்கள்  www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in  , ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result, Local News, Virudhunagar