தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை சார்பில் எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா மற்றும் கருத்தரங்கம், சாட்சியாபுரம் எல்வின் சென்டரில் வைத்து நடைபெற்றது . கிளையின் துணைத்தலைவர் சொ.லட்சம் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் சசிரேகா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கு.அழகிரிசாமியின் ஆவணப்படம் திரையிடலைத் தொடர்ந்து எழுத்தாளர் ம.மணிமாறன் ,எழுத்தாளர் ஜா.மாதவராஜ் , எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் இலட்சுமிகாந்தன் நோக்கவுரையாற்றினார்.
போட்டியில் தேர்வான சிறுகதைகளின் தொகுப்பு "வெயில்வெளி" நூலினை தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான ஜெய் பவானி பயர்வொர்க்ஸ் பவானிராஜ், கற்பகா காலாண்டர்ஸ் ஜெய்சங்கர் ,எல்வின் சென்டர் பள்ளியின் தயாளன் பர்னபாஸ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர் .
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
போட்டியில் முதல் மூன்று பரிசுகளுக்கான பரிசுத் தொகையை ஸ்வரமஞ்சரி ,க. பொன்ராஜ் ,ரஜினி பெத்துராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .தேர்வான சிறுகதைகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் புத்தக தொகுப்பு அனைத்து போட்டியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
விழாவின் முத்தாய்ப்பாய் சிறுவர்களுக்கான கலை நிகழ்வுகள் அரங்கேறியது. கயல்,முனியசாமி ,விஸ்வா ,சிவாணி தன்ஷிகா ,லெனினா ,தருண் மாதேஷ் ,புவன் ஆகாஷ் ஆகிய குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sivakasi, Virudhunagar