ஹோம் /விருதுநகர் /

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்புகள் காம்போ பேக்.. முழு விவரம்..

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்புகள் காம்போ பேக்.. முழு விவரம்..

ஆவினில்

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்புகள் காம்போ பேக் !!!

Aavin Sweets Combo Pack | ஆவின் அறிமுகப்படுத்தியுள்ள தீபாவளி ஸ்பெஷல் காம்போ பேக்கை, தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்க விரும்புவோர் இதை வாங்கி பயன்படுத்தலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து சந்தைபடுத்தி விற்பனை செய்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்கள் மட்டும் இல்லாமல் தற்போது தீபாவளி சீசன் என்பதால் அதற்காக இனிப்பு வகைகளும் ஆவின் பண்ணைகளிலே தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

காம்போ பேக்: சில்லறை விற்பனை மட்டும் இன்றி மொத்தமாக பலகாரங்கள் கொண்ட காம்போ பேக் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேக்கில் பால் கோவா - 200 கிராம் அளவு மைசூர்பா - 250 கிராம் நெய் அல்வா - 250 கிராம் காரம் - 250 கிராம் என நான்கு பொருட்கள் வைத்து கொடுக்கப்படுகின்றன. இதனுடைய விலை 400 ரூபாய். இந்தப் பொருட்களின் விலையை தனித்தனியாக கூட்டி பார்த்தால் 415 ரூபாய் காம்பே பேக் என்பதால் நானூருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதிக்கு சென்றது

தீபாவளிக்கு பரிசளிக்க விரும்புவோர் மற்றும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்க விரும்புவோர் இதை வாங்கி பயன்படுத்தலாம்.

ஆவின் நிறுவன பொருட்கள் எப்போதும் தரமாகவும் சுவையாகவும் இருப்பதால், இதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்புகள் காம்போ பேக் !!!

மேலும் இதன் மூலம் இந்நிறுவனத்தை சார்ந்துள்ள விவசாயிகளையும் பயன் பெற செய்யலாம்.ஆவின் இனிப்புகளை அருகில் உள்ள ஆவின் ஹைடெக் பார்லர்களிலோ அல்லது மாவட்ட ஆவின் முகவர்களிடமோ பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க:  ராஜபாளையம் நாயின் சிறப்புகள் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

இராஜபாளையம் ஆவின் : 9443169283, 9842122852

திருவில்லிபுத்தூர் ஆவின்: 9625120615

சிவகாசி ஆவின்: 6369454563, 9944334809

விருதுநகர் ஆவின்: 8825766842, 9787018006

சாத்தூர் ஆவின்: 9489464442, 9894365515

அருப்புக்கோட்டை ஆவின்: 9524797902

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Aavin, Deepavali, Local News, Virudhunagar