முகப்பு /விருதுநகர் /

வந்துவிட்டது சம்மர்.. "இப்படி தான் இருக்கனும்" எச்சரிக்கும் விருதுநகர் மருத்துவர்!

வந்துவிட்டது சம்மர்.. "இப்படி தான் இருக்கனும்" எச்சரிக்கும் விருதுநகர் மருத்துவர்!

X
மருத்துவர்

மருத்துவர் அறிவுரை

Virudhunagar | வெயில் காலம் தொடங்கி விட்டதால் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, எச்சரிக்கை விடுக்கிறார் விருதுநர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழகத்தின் மழைமறைவு பகுதியாக உள்ள விருதுநகரை பொறுத்த வரை சாதாரண நாட்களிலேயே வெயில் சற்று அதிகமாக தான் இருக்கும். அப்படி இருக்கையில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வாட்டி தொடங்கி உள்ளது. இந்த காலத்தில் அம்மை, நீரிழப்பு, வெப்ப வாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் விருதுநகரை சேர்ந்த மருத்துவர் செந்தில் குமார்.

என்ன செய்ய வேண்டும்?

வெயில் காலத்தில் வியர்வை மூலமாக அதிகளவு உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் நீரிழப்பு ஏற்படும். இதனால் வெயில் காலத்தில் உடல் எப்போதும் சோர்ந்தே காணப்படும். அதை சமன் செய்யும் வகையில் தினமும் 2 ல் இருந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மோர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதோடு உடலை எனர்ஜியாகவும் வைத்துக்கொள்ளலாம். வெயில் காலத்தில் இலகுவான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது முகம் கை கால்களை மூடிக்கொண்டு செல்வதன் மூலம் வெயிலால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம். சளி பிடிக்க வாய்ப்பு இருப்பதால் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது.

என்ன செய்ய கூடாது:

இயற்கை பானங்களை அருந்தலாம்,பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும். அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். பருத்தியாலான துணிகளை தவிர்த்து மற்ற துணிகளை அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நெருக்கமான ஆடைகளையும், ஜீன்ஸ் ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். கோடை வெயில்நேரத்தில், வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் மேற்சொன்ன தகுந்த முன்னேற்பாடு களுடன் செல்ல வேண்டும்.

இன்னும் இரண்டு மாதங்கள் முழுமையாக வெயிலின் தாக்கம் இருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் வெயில் கால வழிமுறையை முறையாக கடைபிடிப்பதன் மூலம் கோடை காலத்தை இனிமையாக்க முடியும்.

top videos

    வெயில் காலம் தொடங்கி விட்டதால் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.

    First published:

    Tags: Doctor, Local News, Summer, Summer tips, Virudhunagar