முகப்பு /Virudhunagar /

செம்பட்டி: நெருங்கும் பொங்கல் பண்டிகை - கரும்பு அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

செம்பட்டி: நெருங்கும் பொங்கல் பண்டிகை - கரும்பு அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

கரும்பு அறுவடை

கரும்பு அறுவடை

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • Last Updated :

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் விவசாயிகள் கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுவடையான கரும்புகளை வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

கரும்பு அறுவடையில் விவசாயிகள் மும்முரம்:-

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக விருதுநகர் மாவட்டம் செம்பட்டி, நடையநேரி, எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல நூறு ஏக்கரில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்குவதால் விவசாயிகள் விளைந்த கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மொத்த வியாபாரிகள் விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்து வெளியூர்களுக்கு லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக கரும்புகளை ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

தற்போது, சந்தையில் ஒரு கட்டுக் கரும்பின் விலை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்

top videos

    First published:

    Tags: Virudhunagar