ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் அதிகரித்து வரும் தெரு நாய் பிரச்சனை.. விலங்குகள் நல ஆர்வலர் சொல்லும் தீர்வு என்ன?

விருதுநகரில் அதிகரித்து வரும் தெரு நாய் பிரச்சனை.. விலங்குகள் நல ஆர்வலர் சொல்லும் தீர்வு என்ன?

X
தெரு

தெரு நாய்கள்

Virudhunagar District News : விருதுநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் பல பகுதிகளில் எண்ணற்ற தெருவோர நாய்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் மனிதர்களை பார்த்து பழக்கப்பட்ட இந்த தெரு நாய்கள் மீது தற்போது வெறிநாய்கடி, சாலையோர விபத்துகள் என்று நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியாவின் பல பகுதிகளிலும்தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு சமூக பிரச்சனையாக மாறியுள்ளது. தெருவோரங்களில் வரும் புதிய நபர்களை நாய்கள் துரத்துவதும், கடிப்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும் வேளையில், பதிலுக்கு நாய்களை கொல்லும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அருகில் இருக்கும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை சிகிச்சை செய்து அனுப்ப வேண்டும் என்பது தான் விதி.

இதையும் படிங்க : சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைப்பு - முழுவிவரம் இதோ...

ஆனால் விதிக்கு புறம்பாக பிடிக்கப்பட்ட நாய்கள் கொல்லப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் சேர்ந்து ஆட்களை வைத்து 50க்கும் மேற்பட்ட நாய்களை அடித்தே கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அவற்றை கொல்லுவது ஒரு தீர்வாகாது என்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் சுனிதா.

தெரு நாய்கள் எங்கிருந்து வருகிறது?

முதலில் தெரு நாய்கள் எங்கிருந்து வருகின்றன என சிந்திக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தான் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில் கைவிடப்பட்டு தெருவில் விடப்படுகின்றன.

இந்த நாய்கள் மூலமாக தான் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. இப்போது நீங்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த அதை கொன்றாலும், ஒரு பக்கம் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சை அருமையான வழி. தெரு நாய்களை காட்டிலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கட்டாயம் கருத்தடை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பன போன்ற நாய் வளர்ப்பிற்கென சில சட்டதிட்டங்களை கொண்டு வரும் பட்சத்தில் இதை சரி செய்யலாம் என்றார்.

First published:

Tags: Local News, Virudhunagar