முகப்பு /விருதுநகர் /

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்குமா சிவகாசி மாநகராட்சி?

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்குமா சிவகாசி மாநகராட்சி?

X
சாலைகளில்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

Sivakasi Roads : சிவகாசி சாலைகளில் கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாலைகளில் கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை  வளர்ப்போர் சிலர்போதிய வசதி இல்லாத காரணத்தால் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகளை நகர் பகுதிக்கு கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். நகர் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் இந்த பசு மாடுகள் தெருவோர குப்பைகளில் இருக்கும் கழிவுகளை உண்டு சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன.

இது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதை தடுக்க யாரும் மாடுகளை சாலையில் விடக்கூடாது என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஆனாலும் அதை மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளாமல் மாடுகளை சாலையில் திரிய விட்டுள்ளதால் சிவகாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ள சிவகாசியில் இப்படி கட்டுப்பாடு இன்றி சுற்றி திரியும் கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar