முகப்பு /விருதுநகர் /

கடைகளே இல்லாத விநோத கிராமம்.. இப்படியும் வாழ்ந்து வரும் விருதுநகர் பூசாரிப்பட்டி மக்கள்..!!

கடைகளே இல்லாத விநோத கிராமம்.. இப்படியும் வாழ்ந்து வரும் விருதுநகர் பூசாரிப்பட்டி மக்கள்..!!

X
விருதுநகர்

விருதுநகர் பூசாரிப்பட்டி

Virudhunagar News | விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் எங்கு திரும்பினாலும் ஒரு கடையை கூட பார்க்க முடியாது. விவசாயத்தையும் பட்டாசையும் பிரதான தொழிலாக கொண்டுள்ள இவ்வூரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

வர்த்தகத்தில் முன்னேறி வரும் விருதுநகர் மாவட்டம் தென் தமிழகத்திலேயே நல்ல பொருளாதாரத்தை ஈட்டி வரும் நிலையில், இதுவரை கடைகளே இல்லாத ஒரு விநோத கிராமம் இந்த மாவட்டத்தில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அமைந்துள்ள பூசாரிப்பட்டி கிராமம் தான் அது. விவசாயத்தையும் பட்டாசையும் பிரதான தொழிலாக கொண்டுள்ள இவ்வூரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கிட்ட தட்ட 100 ஆண்டுகளாக கடைகள் இன்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது இவ்வூரில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களின் பயன்பாடு இருக்க கூடாது என்பதற்காகவே இவ்வூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவும் முன்னோர்கள் கடை வைக்க கூடாது என முடிவு செய்து அதை இன்றும் கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது பற்றி பூசாரிப்பட்டியை சேர்ந்த வெடிமுத்து என்பவரிடம் விசாரித்தபோது, “பீடி, சிகரெட் பயன்பாட்டை கட்டுப்படுத்த இன்று வரை கடைகள் வைக்கப்படாமல் உள்ளது. ஒரு வேளை கடை வைத்தால் பீடி, சிகரெட் வந்து விடும் என்பதால் அதை இன்று வரை ஊருக்குள் அனுமதிக்காமல் இருக்கிறோம். கடைகள் இன்றி இருப்பது தங்களின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது” என்றார். இன்று பெரும்பாலான மக்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில் தனது ஊர் மக்கள் பீடி சிகரெட் பொருட்களுக்கு அடிமையாகி விட கூடாது என்பதற்காகவே ஒரு கிராமமே கடைகள் இன்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar