முகப்பு /விருதுநகர் /

விருதுநகருக்கு பரோட்டா வந்த கதை தெரியுமா?

விருதுநகருக்கு பரோட்டா வந்த கதை தெரியுமா?

X
பரோட்டா

பரோட்டா

Virudhunagar Parotta | விருதுநகருக்கு பரோட்டா இலங்கையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொஞ்சம் சாப்பிட்டாலே பசி அடங்கி விடும் என்பதால் வியாபாரிகளும் தொழிலாளர்களும் இதை அதிகமாக சாப்பிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

உங்களுக்கு விருப்பமான உணவு என்னவென்று விருதுநகர்காரரிடம் கேட்டால் அவர்களின் பதில் கண்டிப்பாக புரோட்டாவாக தான் இருக்கும். பல வெளியூர் நண்பர்களுக்கு விருதுநகர் என்றாலே பரோட்டா தான் முதலில் நினைவுக்கு வரும். கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா என பல வகைகள் இருந்தாலும் விருதுநகரில் கிடைக்கும் பொரிச்ச பரோட்டாவிற்கு தனி ரசிகர்களே உள்ளன.

எப்படி இந்த பரோட்டா இவ்வளவு புகழ் பெற்றது என காரணம் தேடிய போது நம் கண்ணில்பட்டவர் விருதுநகரில் மூன்று தலைமுறைகளாக பரோட்டா விற்று வரும் காரனேசன் உணவக உரிமையாளர் கணேசன். வாங்க தம்பி பரோட்டா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என இலையில் பிச்சுபோட்டு ஊற வைத்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார்.

பரோட்டா வரலாறு:

பொதுவாக விருதுநகருக்கு பரோட்டா இலங்கையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொஞ்சம் சாப்பிட்டாலே பசி அடங்கி விடும் என்பதால் வியாபாரிகளும் தொழிலாளர்களும் இதை அதிகமாக சாப்பிட்டு வந்துள்ளனர். முதலில் தூத்துக்குடி துறைமுகத்தில் பரோட்டா கடை வைத்து விற்பனை செய்யப்பட்டது. அப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து விருதுநகர் வழியாக வந்த வியாபாரிகள் மூலமாக தான் பரோட்டா விருதுநகரில் அறிமுகம் ஆனது.

பொதுவாகவே விருதுநகரில் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பு அதிகம். அதனால் எண்ணெய் இல்லாமல் தயாரித்த சாதாரண பரோட்டாவை ( வாட்டு பரோட்டா) எண்ணெய்யில் பொரித்து சாப்பிட தொடங்கினர். வழக்கத்தை விட சுவை அதிகமாக இருந்த காரணத்தால் இந்த பொரிச்ச பரோட்டா விருதுநகர் பரோட்டாவாக மாறிவிட்டது என்றார். அப்புறம் தம்பி என மேலும் பேச தொடங்கிவர் பரோட்டாவின் சுவைக்கு காரணமான சால்னாவை பற்றி பேச தொடங்கினார்.

விருதுநகர் பொரிச்ச பரோட்டா எப்படி செய்றாங்க தெரியுமா? விளக்கும் பரோட்டா மாஸ்டர்

சால்னா என்பது பொதுவாக தென்மாவட்டங்களில் பரோட்டாவிற்கு கொடுக்கப்படும் குழம்பு. சாதாரணமாக விருதுநகர் பரோட்டாவை அப்படியே சாப்பிட்டாலும் மொறு மொறுவென்று சுவையாக தான் இருக்கும். ஆனால் அந்த புரோட்டவை நொறுக்கி சால்னாவில் ஊற வைத்து சாப்பிட்டால் தான் அதன் அசல் சுவையை உணர முடியும் என்று பரோட்டா துறைமுகத்தில் இருந்து விருதுநகர் வந்த கதையை கூறி முடித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar