Home /virudhunagar /

அதிசயங்கள் நிறைந்த தரகுமலை மாதா கோவில்

அதிசயங்கள் நிறைந்த தரகுமலை மாதா கோவில்

விருதுநகர்

விருதுநகர் - தரகுமலை மாதா கோவில்

Virudhunagar TharaguMalai Matha Church | விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற தரகு மலை மாதா கோவில் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மாவட்டம் ஆன்மிக வளத்திற்கு குறைவில்லாத ஊர் என்பதற்கு சான்றாக நிறைய ஆலயங்கள் இங்கு காணப்படுகின்றன. ஆலயங்கள் என்றதும் இந்து மத கோவில்கள் என்பதாக மட்டுமல்லாமல் பிற சமய கோவில்களும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அதற்கு சிறந்த சான்று தான் 50 ஆண்டு பழமையான தரகு மலை மாதா கோவில்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற தரகு மலை மாதா கோவில் உள்ளது. மலைக்கு மேலே அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் அனைத்து சமய மக்களும் வந்து செல்வதுண்டு.

கோவில் அமைவிடம்:

திருவண்ணாமலை பெருமாள் கோவிலில் இருந்து சரியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த மாதா கோவில். மலை சற்று செங்குத்தாக இருப்பதால் மலையேற வருபவர்கள் வரும் போதே கையில் உணவுப்பொருளும், நீரும் எடுத்து வருதல் நலம். வரும் வழியெங்கும் சிறு சிலைகளுடன் கோவில் போல இருக்கும் அமைப்பை காண முடிகிறது.


விருதுநகர் - தரகுமலை மாதா கோவில்


மலைக்கு மேலே செல்ல செல்ல இதன் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:  விருதுநகரின் பெருமையை உலகுக்கு சுட்டி காட்டும் சுற்றுலாத் தலங்கள்

கோவில் வரலாறு:

சுமார் 50 வருடங்களுக்கு முன் இந்த மலை சாதாரண மலையாக தான் இருந்துள்ளது. அச்சமயம் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனுக்கு இந்த மலையில் இயேசு நாதர் காட்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சில நாட்கள் கழித்து மாதாவும் காட்சி தந்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் இங்கே ஆலயம் கட்டி வழிபட்டு வருகின்றனர்.


விருதுநகர் - தரகுமலை மாதா கோவில்


இந்த தேவாலயத்தின் சிறப்பு என்னவென்றால் மற்ற தேவாலயங்களில் மதியம் 12 மணிக்கு மணி அடித்து பூஜை நடக்கும் ஆனால் இங்கு 11 மணிக்கு மணி அடித்து பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு காரணம் இயேசுவும் மாதாவும் காட்சி கொடுத்த நேரம் சரியாக 11 மணி அதனால் தான் இங்கு 11 மணி பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பஸ் வசதி:

ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி பஸ் வசதி உள்ளது‌. திருவண்ணாமலையில் இருந்து இந்த மலைக்கு நடந்து வர வேண்டும்.
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி