ஹோம் /விருதுநகர் /

ஶ்ரீவில்லிபுத்தூரில் இப்படி தான் தயாராகிறதா ஆவின் பால்கோவா? ஒரு நேரடி விசிட்..

ஶ்ரீவில்லிபுத்தூரில் இப்படி தான் தயாராகிறதா ஆவின் பால்கோவா? ஒரு நேரடி விசிட்..

ஆவின்

ஆவின் பால்கோவா

Srivilliputhur Aavin Palkova | தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் பால்கோவா தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Srivilliputhur | Virudhunagar

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பால்கோவாவிற்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரின் ஆவின் நிறுவனத்தில் பால்கோவா தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளுக்கு அடுத்தபடியாக இருப்பது இனிப்புகள் தான். விருதுநகர் மாவட்ட மக்களை பொறுத்த வரை தீபாவளி ஸ்வீட் லிஸ்டில் பால்கோவா இல்லாமல் தீபாவளி முழுமை பெறாது. ஏனென்றால் பால்கோவாவுக்கு தமிழக அளவில் புகழ்பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் நகரமே இங்கு தானே உள்ளது.

பால்கோவையும் இம்மக்களையும் பிரிக்கவே முடியாது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பால்கோவா தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு பால்கோவா எப்படி தயார் செய்யப்படுகிறது என்பது பற்றி நேரடியாகவே சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க:  சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

பால்கோவா செய்முறை:

பால்கோவாவின் மூலப்பொருள் பாலும் சர்க்கரையும் தான். பாலை நன்றாக பெரிய பாய்லரில் காய்ச்சி கொதிக்க வைக்கின்றனர். உடன் சர்க்கரையை சேர்த்து கிண்டி பாலை சுண்ட வைத்தால் பால் கோவா ரெடி. பார்க்க சுலபமாக தெரிந்தாலும் பாலை பொறுமையாக கிண்டி வர வேண்டும் இல்லை என்றால் அடி பிடித்து விடும் என்கின்றனர் ஊழியர்கள்.இதை சாதரணமாக நம் வீட்டிலும் செய்யலாம் அப்பறம் எதுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இவ்வளவு மவுசு என தோன்றலாம். பால்கோவாவின் சுவை பாலின் தரத்தில் உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் பாலில் அத்தகைய தரம் உள்ளது என்கின்றனர் அதனால் தான் இதற்கு இவ்வளவு மவுசு.

மேலும் படிக்க:  கந்தக பூமியான விருதுநகரில் ட்ராகன் ஃப்ரூட் விவசாயம் செய்து அசத்தும் இளைஞர்!

அடுத்ததாக சுண்டிய பால்கோவாவை ஒரு தட்டில் வைத்து நாள் முழுவதும் ஆற வைக்கின்றனர்.அது ஏன் என்று கேட்டால் அப்போது தான் அதிலிருக்கும் ஈரப்பதம் நீங்கி சாப்பிட இன்னும் ஏதுவாக இருக்கும் என்றனர். அதன் பின் என்ன பால்கோவா தயார் தேவையான அளவுகளில் பேக் செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் தென்தமிழகமெங்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தான் சப்ளை செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Srivilliputhur Constituency, Virudhunagar