முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் மாரியம்மன் கோவிலுக்கு வழிகாட்ட நெடுஞ்சாலைத்துறை வைத்த பலகையில் எழுத்துப்பிழை!

விருதுநகரில் மாரியம்மன் கோவிலுக்கு வழிகாட்ட நெடுஞ்சாலைத்துறை வைத்த பலகையில் எழுத்துப்பிழை!

X
நெடுஞ்சாலைத்துறை

நெடுஞ்சாலைத்துறை வைத்த பலகையில் எழுத்துப்பிழை

Virudhunagar District News | விருதுநகர் மாரியம்மன் கோவிலுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் எழுத்துப்பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு வரும் வழியை, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியை குறிப்பிட்டஆங்காங்கே பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அப்படி வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் சில இடங்களில் மாரியம்மன் கோவிலின் பெயர் தவறாக உள்ளது. அதாவது "பராசக்தி மாரியம்மன் கோவில்" என்பதற்கு பதிலாக "பாரசக்தி மாரியம்மன் கோவில்" என்று எழுத்துப்பிழையுடன் இருக்கிறது. பெயர் பலகையில் உள்ள மாரியம்மன் கோவில் புகைப்படத்தில் தெளிவாக பராசக்தி மாரியம்மன் கோவில் என இருக்கும்போது நெடுஞ்சாலைத்துறையினர் இதை கூடவா கவனிக்காமல் விட்டனர் என கேள்வி எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை வைத்த பலகையில் எழுத்துப்பிழை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது சிறிய விஷயம் என்றாலும் புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலின் புகழுக்கு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது. எனவே இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar