விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்திற்க உட்பட்ட பகுதிகளில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் குறித்து, விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்ட மின்வாரிய அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க அவரவர் வசிக்கும் இடங்களிலேயே சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) திருத்தங்கல், வடமலாபுரம், சுக்கிரவார்பட்டி, ஆனைக்குட்டம், ஆலமரத்துப்பட்டிரோடு, சிறுவர்பூங்காதெரு, ஆலாவூரணி, சத்யாநகர், கருணாநிதி காலனி, பனையடிப்பட்டி, 52 வீட்டு காலனி, ராதாகிருஷ்ணன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, பெரியார் காலனி, மகாத்மாகாந்தி நகர் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, முத்தாட்சிமடம், நம்மஅண்ணாச்சி நகர், செங்கமலநாச்சியார்புரம், ஸ்டேட்பேங்க் காலனி, கங்காகுளம், திருப்பதிநகர், சாரதாநகர், எம்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, பூர்ணசந்திரபுரம், பூவநாதபுரம், நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், லட்சுமியாபுரம், விநாயகர்காலனி, செங்கமலப்பட்டி அகிய இடங்களிலும் நடக்கிறது.
Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..
மேலும், செல்லையா நாயக்கன்பட்டி, பூச்சக்காபட்டி, சல்வார்பட்டி, கட்டசின்னம்பட்டி, நமஸ் கரித்தான்பட்டி, தேவர்குளம், வடபட்டி மற்றும் ஈஞ்சார் ஆகிய இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card, EB Bill, Local News, Virudhunagar