ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான பரதநாட்டியப் போட்டி

விருதுநகரில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான பரதநாட்டியப் போட்டி

X
பரதநாட்டியப்

பரதநாட்டியப் போட்டி

Virudhunagar | விருதுநகரில் தென்மாவட்ட அளவிலான பரதநாட்டியப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

விருதுநகரில் கடந்த 22 ம் தேதியன்று தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான விருதுநகர் ஒய்ஸ் மகளிர் சங்கம், விருதுநகர் சக்தி காமராஜர் ஜேசிஸ், இதயம் நல்லெண்ணெய் சார்பில் 17 வது தென் மாவட்ட அளவிலான பரத நாட்டிய போட்டி நடைபெற்றது.விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் நடனம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து பேசிய ஒய்ஸ் சங்க தலைவர் வாழவந்தான், ’விருதுநகர் ஒய்ஸ் சங்கம் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த வகையில் ஆண்டு தோறும் தென்மாவட்ட அளவில் பரதநாட்டிய போட்டி நடத்தி வருவதாகவும், இந்தாண்டு 17 வது நாட்டியாஞ்சலி சிறப்பாக நடைபெற்றதாகவும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar