ஹோம் /விருதுநகர் /

குழந்தைகள் தினம்- தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வ அமைப்பு

குழந்தைகள் தினம்- தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை மகிழ்வித்த தன்னார்வ அமைப்பு

தீம்

தீம் பார்க்கில் குழந்தைகள்

Virudhunagar | விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ அமைப்பு குழந்தைகளை தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்று மகிழ்வித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

சிவகாசியை சேர்ந்த குழந்தைகளை Right club for education என்ற  தன்னார்வ அமைப்பினர் மதுரையில் உள்ள தீம் பார்க் அழைத்து சென்று குழந்தைகளை மகிழ்வித்தனர்.

நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான Right club for education அமைப்பினர் குழந்தைகளை ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் பல குழந்தைகளின் கனவு உலகமாக இருக்கும் பல தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் சாகச விளையாட்டுகள் நிறைந்த தீம் பார்க் அழைத்து செல்ல முடிவு செய்து கடந்த ஞாயிறு அன்று மதுரையில் இருக்கும் அதிசயம் தீம் பார்க் அழைத்து சென்றனர்.

முதன் முதலாக தீம் பார்க் வந்த மகிழ்ச்சியில் குழந்தைகளும் தன்னிலை மறந்து விளையாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து பேசிய தீம் பார்க் வந்திருந்த மாணவன் அண்ணாமலை, ‘இதுவரை நான் இது போன்ற தீம் பார்க் பார்த்ததே இல்லை. இதுவே முதல் முறை. குழந்தைகள் தினத்தை கொண்டாட தீம் பார்க் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என்று கூறினார்.

இதுகுறித்து உடன் வந்திருந்த பெற்றோர் ஒருவர் பேசுகையில், ’தான் இதுவரை இது போன்ற தீம் பாரக்குகளை சிறுவயதில் இருந்தே தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து வந்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் தன் மகனோடு முதல் முறையாக தீம் பார்க் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த தன்னார்வ அமைப்பினர் குழந்தைகளை மேலும் மகிழ்விக்க இந்த தீம் பார்க் அழைத்து வந்ததாகவும், இந்த குழந்தைகள் அனைவரும் இங்கு வருவது இதுவே முதல்முறை. இனிவரும் காலங்களில் இது தவிர்த்து நிறைய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar