முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் பாலத்தை சூழ்ந்த புகைமண்டலம்.. மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் அவதி.. 

விருதுநகர் பாலத்தை சூழ்ந்த புகைமண்டலம்.. மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் அவதி.. 

X
பாலத்தை

பாலத்தை சூழ்ந்த புகைமண்டலம்! மூச்சு திணறலால் வாகன ஓட்டிகள் அவதி 

Smoke Surrounding Virudhunagar Bridge : விருதுநகர் சாத்தூர் சாலையில் திறந்த வெளியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அப்பகுதி புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுவதோடு வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்துவதற்காக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே கவுசிகா நதியின் மேல் அமைப்பட்டுள்ள பாலத்தின் பக்கதில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது இந்த குப்பைகள் அனைத்தும் அதே பாலத்திற்கு கீழ் வைத்து எரிக்கப்படுகின்றன.

இப்படி குப்பைகள் திறந்த வெளியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதனால் உண்டாகும் புகை பாலத்தை சூழ்ந்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதோடு சில சமயங்களில் மூச்சு திணறலும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றி குப்பைகள் கையாளப்படாமல் நிறைய இடங்களில் திறந்த வெளியில் எரிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Virudhunagar