Home /virudhunagar /

Virudhunagar : குட்டி குட்டி பஸ், கார் மினியேச்சர்கள் செய்து அசத்தி வரும் விருதுநகர் இளைஞர் 

Virudhunagar : குட்டி குட்டி பஸ், கார் மினியேச்சர்கள் செய்து அசத்தி வரும் விருதுநகர் இளைஞர் 

விருதுநகர்

விருதுநகர் - மினியேச்சர் கார், பஸ்

Virudhunagar District News : விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான திலீப், பஸ் கார் போன்ற வாகனங்களின் மினியேச்சர்களை உருவாக்கி தந்து பகுதிநேர தொழிலில் அசத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை என கூறிக்கொண்டே எதுவும் செய்யாமல் நாட்களை வீணாக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகுசிலரே தன்னிடம் இருக்கும் திறமையினை பயன்படுத்தி சாதனை படைக்கின்றனர்.

    அந்த வகையில், சிவாசியை சேர்ந்த திலீப் என்ற இளைஞர் பஸ், கார் போன்ற மினியேச்சர்களை செய்து அசத்தி வருகின்றார்.
    மினியேச்சர் என்பது ஒரு அழகிய கலை. நிஜத்தில் பெரிதாய் உள்ள பொருளை அப்படியே அதன் தன்மை மாறாமல் சிறியதாய் மிகவும் தத்ரூபமாய் உருவாக்குவதே மினியேச்சர்.

    இளைஞர் திலீப்


    இந்த மினியேச்சர்கள் பார்ப்பதற்கு சிறியதாய் அழகாக இருப்பதால் பொதுமக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

    மினியேச்சர் கார், பஸ்


    இது குறித்து மினியேச்சர் செய்து வரும் திலீப் கூறியதாவது: லாக்டவுன் நேரத்தில் பொழுதுபோக்கிற்காக KSRTC பஸ் செய்ததாகவும், பின் அப்படியே சுற்றுவட்டார பேருந்துகளையும் செய்துள்ளதாகவும் அதை பார்த்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் தங்களுடைய பஸ்களின் மினியேச்சர்களையும் செய்து தரும்படி ஆர்டர் கொடுத்ததாகவும் கூறினார்.

    மினியேச்சர் பஸ்


    இது வரை பஸ், லாரி, ட்ரக் போன்ற வாகனங்களின் மினியேச்சர்களை செய்து கொடுத்துள்ளார் இவர்.  BCA பட்டதாரியான இவர் வேலை போக மீதம் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்த மினியேச்சர்களை உருவாக்கி வருகிறார்.

    மினியேச்சர் பஸ்


    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    உங்கள் வாகன மினியேச்சர்களை ஆர்டர் செய்ய திலீப்பை 6382980169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி