ஹோம் /விருதுநகர் /

வியாபாரத்துக்கு கைகொடுக்கும் சமூக வலைத்தளங்கள்.. தொழில் முனைவோராக மாறிய சிவகாசி இளைஞர் தரும் பிசினஸ் டிப்ஸ்..

வியாபாரத்துக்கு கைகொடுக்கும் சமூக வலைத்தளங்கள்.. தொழில் முனைவோராக மாறிய சிவகாசி இளைஞர் தரும் பிசினஸ் டிப்ஸ்..

X
விருதுநகர்

விருதுநகர்

Virudhunagar District News | வேலை.. வேலை என்று நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் வேலை தேடுவதை விடுத்து தானே சொந்தமாக தொழில் செய்து அசத்தி வருகிறார் சிவகாசியை சேர்ந்த அம்ரிஷ்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அம்ரிஷ் என்ற இளைஞர்,   மூலிகை பொருட்கள் விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

இன்றைய சூழலில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பசி, வறுமை என பல்வேறு நெருக்கடிகள் நிலவி வருகிறது. ஆனாலும் எங்கோ ஒரு சிலர் அதையெல்லாம் கடந்து, சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பிரச்சனையில் மாட்டிக் கொண்டு புலம்புபவர்களைவிட அதில் இருந்து எப்படி வெளியே வருவது என மாற்று வழியை யோசிப்பவர்களே, வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் வேலை.. வேலை என்று நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் வேலை தேடுவதை விடுத்து தானே சொந்தமாக தொழில் செய்து அசத்தி வருகிறார் சிவகாசியை சேர்ந்த அம்ரிஷ்.

இயற்கை அங்காடி:

சுயதொழில் என்றதும் ஏதோ ஒன்றை தொடங்காமல் என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இன்றைய சுழலில் மக்கள் மத்தியில் ரசாயன பொருட்களற்ற இயற்கை ஆயுர்வேதிக் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை சரியாக புரிந்து கொண்ட இந்த இளைஞர் அத்தகைய பொருட்களை தயாரிப்போரிடம் இருந்து பெற்றுக்கொண்டு சிவகாசியில்  ‘அய்யா இயற்கை அங்காடி’ என்ற பெயரில் விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு, சிறுதானிய நூடுல்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் அம்ரிஷ், ஏதேச்சையாக தனது அண்ணன் நடத்தி வரும் இயற்கை பொருட்கள் கடைக்கு சென்றிருந்த போது நாமும் இது போல் நம்ம ஊரில் ஒரு கடை ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா வந்ததாக கூறினார்.

பல இடங்களில் வேலை செய்து ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து கடைசியில் சுயதொழில் செய்யலாம் என முடிவெடுத்து லோன் வாங்கி ஆரம்பித்த போது முதலில் வியாபாரம் சரியாக போகவில்லை.கடையை மூடி விடலாம் என யோசித்த போது இந்த பொருட்கள் பற்றி சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய தொடங்கியதாகவும், அதன் பின்னர் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க :  அடேங்கப்பா.... புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு இவ்வளவு பெருமைகளா!

தொடந்து பேசிய அவர் தொழில் தொடங்க நினைப்போர் எடுத்தவுடன் எளிதில் வெற்றி பெற முடியாது விருதுநகர். இன்று எனக்கு சிவகாசி மட்டுமல்ல வெளியூர்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

அவர் சொன்னது போல விட முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஒருவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதித்தாலும் கடைசி வரை அவர் வேலைக்காரன் தான். இதுவே ஒருவர் மாதம் ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்தாலும் அவர் முதலாளி தான்... அவரால் அவர் நினைத்ததை செய்ய முடியும். இது தான் சுயதொழிலுக்கும் வேலைக்கும் உள்ள வித்தியாசம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இயற்கை ஹெர்பல் பொருட்கள் வாங்கவும், சந்தேகம் பெறவும் விரும்புவோர் 80566 96409 என்ற எண்ணில் இவர் தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Business, Local News, Sivakasi, Virudhunagar