ஹோம் /விருதுநகர் /

பாதி நாட்கள் காலண்டர்... மீதி நாட்கள் பட்டாசு... சிவகாசி தொழிலாளர்களின் அவலநிலை

பாதி நாட்கள் காலண்டர்... மீதி நாட்கள் பட்டாசு... சிவகாசி தொழிலாளர்களின் அவலநிலை

X
சிவகாசி

சிவகாசி

Sivakasi News : சிவகாசி காலண்டர் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

புத்தாண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் ஆடி 18 தொடக்கி தை மாதம் வரை நடைபெறும் நிலையில் தற்போது புத்தாண்டு நெருங்கிவிட்டாதால் உச்சத்தை அடைந்துள்ளது.

பட்டாசும் காலண்டரும் :

தொழில் நகரமாக விளங்கும் சிவகாசியில் பட்டாசு, அச்சுத் தொழில் இந்த இரண்டுக்கும் அடுத்தபடியாக அதிகளவில் நடைபெறும் தொழில் என்றால் அது காலண்டர் தயாரிப்பு தான். இன்று தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளுக்குகூட சிவகாசியில் இருந்து தான் காலண்டர் அனுப்பபட்டு வருகிறது.

அந்த அளவுக்கு சிவகாசி காலண்டர் புகழ் பெற்றது. இதற்கு காரணம் சிவகாசியில் அதிகளவு ப்ரிண்ட்டிங் ப்ரஸ் இருப்பதும் மூலப்பொருட்கள் எளிதாக கிடைப்பதும் தான்.

ஒரு காலத்தில் அமோகமாக நடைபெற்று வந்த இந்த தொழிலும் இன்று மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் சரிவை சந்தித்து வருகின்றன.பலர் காலண்டர் தொழிலை விட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் இன்று பட்டாசு வேலைக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க : மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

பட்டாசு இல்லாத நாட்களில் காலண்டர் தயாரிப்புக்கு வருவதாகவும், பொங்கல் முடிந்தவுடன் மீண்டும் பட்டாசு ஆலைக்கு செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி பட்டாசு காலண்டர் என மாறி மாறி செல்வதையே சிவகாசி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் காலண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் இந்தாண்டு காலண்டருக்கு வரவேற்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஆடி மாத தொடக்கத்தில் வரும் ஆர்டர்கள் இந்த முறை புத்தாண்டை ஒட்டி தான் வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதும் கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது புத்தாண்டு நெருங்கிவிட்டாதால் கொஞ்சம் ஆர்டர் வருவதாகவும் இது பொங்கல் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar