முகப்பு /விருதுநகர் /

கிராம மக்களின் கூட்டு முயற்சி... சிவகாசி அருகே புதுப்பொலிவு பெற்றுள்ள பாண்டியர் காலத்து பொக்கிஷம்...

கிராம மக்களின் கூட்டு முயற்சி... சிவகாசி அருகே புதுப்பொலிவு பெற்றுள்ள பாண்டியர் காலத்து பொக்கிஷம்...

X
பாண்டியர்

பாண்டியர் கால மீனாட்சி அம்மன் கோவில்

Virudhunagar District News : சிவகாசி அருகே பாண்டியர் கால கோவில் பொதுமக்களின் கூட்டு முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது ஈஞ்சாரு கிராமம். வரலாற்று புகழ்பெற்ற இந்த கிராமத்தில் பழமையான பாண்டியர் கால மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் தான் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் என்றாலும் கோவிலின் மூலவராக இருப்பது சிவன் தான். சிவன், அம்மன் உட்பட இந்த கோவிலில் 18 சிலைகள் இருந்துள்ளன (அவையனைத்தும் திருடு போய் விட்டன). கோவில் கல்வெட்டுகள் சோழர் ஆட்சிக்கு முடிவு கட்டி பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவிய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரை குறிப்பிடுவதை வைத்து இது 12ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்பதை அறிய முடிகிறது.

சோழனை வென்றதை கொண்டாடும் வகையில் பாண்டியர்கள் நிறைய இடங்களில் கோவில்கள் கட்டினர். இதுவும் அந்த வகையில் கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர். சிறிய கோவிலாக இருந்தாலும் நுணுக்கமான தூண் வேலைப்பாடுகள் மூலம் காண்போரை கவரும் வகையில் கட்டியுள்ளனர். குறிப்பதாக கோவிலை சுற்றி சுண்ணாம்பு மற்றும் செங்கற்கள் பயன்படுத்தி சுவர் எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க : விருதுநகர் மக்கள் இனி வாட்ஸ்அப்பிலேயே அரசு சேவைகளை தெரிந்துகொள்ளலாம்!

திருடப்பட்ட சிலைகள் :

பழமையான இந்த பொக்கிஷம் சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்பாரற்று கிடந்தது. இதை பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள் பாண்டியர் கால சிலைகளை கடத்திச் சென்றுவிட்டனர். கிட்டத்தட்ட 18 சிலைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் ஒரேயொரு நந்தி சிலை மட்டுமே மிஞ்சியதாக கூறப்படுகிறது.

இதை அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், அந்த ஊர் மக்களே தங்களே தங்களின் சொந்த பணத்தில் கோவிலை தற்போது புதுப்பித்து புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்து தற்போது பூஜை செய்து வருகின்றனர். இதை கேட்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது. இது போன்று ஒவ்வொரு கிராம மக்களும் முன் வந்தால் நம்மூரில் உள்ள பழமையான வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாக்க இயலும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar