தமிழரின் பாரம்பரிய இசையான பறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் சிவகாசியில் அதிர்வு தமிழிசையகம் என்ற பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
பறை இசையே தமிழரின் ஆதியிசை. ஒரு காலத்தில் நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு ஒன்றிருந்த இந்த இசை இன்று ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சுருக்கப்பட்டு, இறுதி ஊர்வலங்களில் மட்டுமே பயன்படுத்த பட்டு வருகிறது. அதனாலேயே இதன் மீது நடக்கும் சாதிய தீண்டாமைகள் ஏராளம்.
இதன் காரணமாகவே இதை வாசிக்கும் பலர் இதை விடுத்து வெவ்வேறு வேலைக்கு சென்று விட்டனர். இப்படி இதன் எதிர்காலமே யோசிக்கும் வகையில் இருக்கும் போது, அனைவரும் பறை கற்று கொண்டால் தான் இந்த கலையை மீட்டெடுக்க முடியும் மேலும் இதன் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள சாதீய தீண்டாமை களையும் களைய முடியும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.
சிவகாசியை சேர்ந்த அதிர்வு தமிழிசையகம் பயிற்சி பள்ளி.வார விடுமுறை தினமான ஞாயிறு அன்று அனைவரும் கூடி பறை அடிக்க பயின்று வருகின்றனர்.
மேலும் படிக்க: ராஜபாளையம் நாயின் சிறப்புகள் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?
இதற்கென இவர்கள் கட்டணம் கூட ஏதும் வசூலிப்பதில்லை.இதை நடத்தி வரும் சரவணகாந்த் பேசுகையில், பறை சங்க காலம் தொட்டே புகழ் பெற்ற இசைக்கருவி. இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இலவசமாக பயிற்றுவித்து வருவதாகவும், தற்போது பள்ளி கல்லூரி விழாக்கள், மேடை சிறப்பு நிகழ்வுகளில் பறை வாசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: விருதுநகரின் பெருமையை உலகுக்கு சுட்டி காட்டும் சுற்றுலாத் தலங்கள்
இங்கு பறை பயின்று வருபவர்கள் வாரம் முழுவதும் அவரவர் வேலையில் ஈடுபட்டு விடுமுறை நாளை பயனுள்ள வகையில் கழித்து வருவதாகவும், பறை இசை பயின்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தனர். பறை இசை கற்று கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 98436 22088 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar