ஹோம் /விருதுநகர் /

பசியென்று வந்தோரின் பசியாற்றி வரும் சிவகாசி வள்ளலார் இல்லம்..

பசியென்று வந்தோரின் பசியாற்றி வரும் சிவகாசி வள்ளலார் இல்லம்..

X
சிவகாசி

சிவகாசி வள்ளலார் இல்லம்

Virudhunagar District News : பசி பிணியின் கொடுமை உணர்ந்த சிலர் அப்படி வாடுவோரின் பசி தீர்த்து சத்தமில்லாமல் சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகாசியின் சிவன் கோயில் குறுகலான தெருவிலுள்ள வள்ளலார் இல்லம் பசியென்று வருவோர்க்கு வயிறார சாப்பாடு கொடுத்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

இந்த உலகில் கொடிய நோய் எதுவென்று கேட்டால், அது பசியென்று தான் கூற வேண்டும். ஏனெனில் நவீன காலத்தில் எத்தனையோ நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வந்திருந்தாலும், இந்த பசிப்பிணிக்கும் இன்றும் மருந்து உணவு தான்.

உலகில் எத்தனையோ பேர் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் வாடி வருகின்றனர்.பசி பிணியின் கொடுமை உணர்ந்த சிலர் அப்படி வாடுவோரின் பசி தீர்த்து சத்தமில்லாமல் சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில் சிவகாசியின் சிவன் கோயில் குறுகலான தெருவிலுள்ள வள்ளலார் இல்லம் பசியென்று வருவோர்க்கு வயிறார சாப்பாடு கொடுத்து வருகிறது.

எப்படி அந்த வள்ளலார் வடலூரில் தொடங்கிய சத்திரம் இன்றும் பலரின் பசியாற்றி வருவது போல் இங்குள்ள வள்ளலார் இல்லம் தன்னால் இயன்ற அளவு தினசரி 100 பேருக்கு ஒரு வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்க உதவி வருகிறது.

இதையும் படிங்க : மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

இலவச சாப்பாடு என்றால் கலவை சாதம் அல்ல கல்யாண விருந்து. அவர் தினமும் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்து கொண்டு,கல்லூரி படிக்கும் போது தினமும் சாலையில் வசிக்கும் பெரியோர்களுக்கு உணவளித்து வந்தார். நாளடைவில் படித்து முடித்த பின்னர் கல்லூரி பேராசிரியரான பின்னர் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல விரும்பினார்.

அதனால் இந்த வீட்டை வாடகைக்கு பிடித்து இப்போது ஆறு மாத காலமாக வள்ளலார் இல்லம் நடத்தி வருவதாக தெரிவித்தார் கணவரின் ஆசைக்காக சேவையில் ஈடுபட்டு வரும் மல்லிகா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது முடிந்த அளவு தங்களின் கையில் இருக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த இல்லத்தை நடத்தி வருவதாகவும், எப்போதாவது யாராவது உதவி செய்ய முன் வந்தால் அவர்களிடம் பொருளாக பெற்றுக்கொண்டு ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் உணவளித்து வருவதாக தெரிவித்தார்.

வள்ளலார் இல்லத்திற்கு உதவ விரும்புவோர் 87782 50294, 99523 37331 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar