முகப்பு /விருதுநகர் /

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த சிவகாசி மாணவர்கள்!

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள்.. வியந்து பார்த்த சிவகாசி மாணவர்கள்!

X
வெம்பக்கோட்டை

வெம்பக்கோட்டை அருங்காட்சியகம்

Vembakottai excavation museum : பழந்தமிழரின் நாகரீகம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர்

  • Last Updated :
  • Virudhunagar, India

தற்போது கோடை விடுமுறை என்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வை சிவகாசி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாட்டை ரைட் கிளப் ஃபார் எஜூகேஷன் என்ற தன்னார்வ அமைப்பினர் செய்தனர்.

பள்ளி மாணவர்களுக்காக 5 ரூபாய் பாடசாலை நடத்திவரும் சிவகாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ரைட் க்ளப் பார் எஜூகேசன் அமைப்பினர் தற்போது கோடை விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழந்தமிழரின் நாகரீகம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து சென்றனர்

கடந்த மே 21 ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில் சிவகாசி காளிஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறை உதவி பேராசிரியர் பொற்கொடி மாணவர்களுக்கு கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள் பற்றி எடுத்துரைத்து விளக்கினார்.

தொடர்ந்து அதே களத்தில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் சூழலில் மாணவர்கள் அகழாய்வு பணிகளை நேரில் கண்டு அதை பற்றியும் அறிந்து கொண்டனர்.

இது குறித்து மாணவர்கள் பேசுகையில் நமது ஊருக்கு பக்கத்தில் நடக்கும் தொல்லியல் அகழாய்வை நேரில் கண்டதன் மூலம் நம் தொன்மையை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது என்று கருத்து தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Sivakasi, Virudhunagar