முகப்பு /விருதுநகர் /

பழைய செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சிவகாசி நபர்

பழைய செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சிவகாசி நபர்

X
பழைய

பழைய செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சிவகாசி நபர் 

Virudhunagar Old News Collector | இன்று வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம் வரும் காலத்தில் இது ஓர் வரலாறு என பெருமிதம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivakasi, India

ஓல்ட் இஸ் கோல்ட் என்பது பிரபலமான பழமொழி, இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதை உணர்ந்த சிவகாசி நபர் ஒருவர் தற்போது செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சிவகாசியை சேர்ந்த எர்வட் என்பவர் பழங்கால பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதோடு ,நாளிதழில் வெளிவந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய செய்திகள் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

எதார்த்தமாக செய்தித்தாள்களில் வரும் வரலாற்று சுவடுகள் பக்கத்தை பார்த்த போது, இது போன்ற வரலாற்று செய்திகளை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறும் அவர், தன்னிடம் உள்ள பழைய செய்திகளின் தொகுப்பை எடுத்து அதில் சிலவற்றை விளக்கினார்.

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் வாங்கிய செய்தியை எடுத்துக் காட்டி, நமக்கு ரகுமான் இசைக்கு ஆஸ்கார் விருது பெற்றார் என்று தான் தெரியும் ஆனால் அவர் ஒரே படத்திற்காக இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருது பெற்றார், ஆக மொத்தத்தில் அவர் பெற்ற ஆஸ்கார் விருதுகளுடைய எண்ணிக்கை இரண்டு இது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். இதை போல் அன்றைய அண்ணா, எம்ஜிஆர் மற்றும் பல சினிமா பிரபலங்கள் பற்றிய செய்திகள் முக்கிய அரசியல் நிகழ்வுகள் பற்றிய செய்திகளை சேகரித்து வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதெல்லாம் இன்று வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம் வரும் காலத்தில் இது ஓர் வரலாறு, இனி வரும் சந்ததிகளுக்கு பயன்படும் என்ற நோக்கில் இதை சேகரித்து வருவதாக தெரிவித்தார். வரலாற்றை தொகுக்கும் இவரின் இந்த முயற்சியை பாராட்ட விரும்புவோர் 82708 32827 என்ற எண்ணை அழைக்கவும்.

First published:

Tags: Local News, Sivakasi, Virudhunagar