முகப்பு /விருதுநகர் /

சிவகாசியில் ஓவிய கண்காட்சி..! பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் கைவண்ணங்கள்..!

சிவகாசியில் ஓவிய கண்காட்சி..! பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் கைவண்ணங்கள்..!

X
சிவகாசியில்

சிவகாசியில் ஓவிய கண்காட்சி

Sivakasi Painting Exhibition : சிவகாசி ஜேசிஸ் பொருட்காட்சி மைதானத்தில் தனி அரங்கில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களை பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கோடைகால பயிற்சி முகாமில் அரசுப்பள்ளி மாணவர்கள் தீட்டிய ஓவியங்கள் தற்போது கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் இலவச கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்போவதாக அறிவித்தது இருந்தது.  இதற்காக ஓவியக் கலையில் சிறந்து விளங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு, தகுதி வாய்ந்த ஓவியர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியின் இடையே சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கு தலைச்சுற்றுலாவும், அழைத்து செல்லப்பட்ட நிலையில், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் தீட்டிய ஓவியங்கள் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிவகாசி ஜேசிஸ் பொருட்காட்சி மைதானத்தில் தனி அரங்கில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களை, பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கின்றனர்.

சிவகாசியில் ஓவிய கண்காட்சி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதோடு மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்துள்ளது.

    First published:

    Tags: Local News, Virudhunagar