விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் அரிசி கொல்வான் என்ற குறுகிய தெருவில் ராமர் தாத்தாவை, சிவகாசி மக்களுக்கு ஓரளவிற்கு தெரிந்திருக்கும். குறிப்பாக சிவகாசி பாய்ஸ் ஸ்கூல் மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். ஏனெனில் இந்த இராமர் தாத்தா, சிவகாசி பாய்ஸ் ஸ்கூல் வாசலில் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா. பென்சில் போன்ற ஸ்டேஷ்னரி பொருட்களை விற்பனை செய்தவர்.ஆனால் இன்று வயது மூப்பு காரணமாக பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இருக்கின்றார்.
இது தொடர்பாக பேசிய இராமர் தாத்தாவும் அவரும் அவருடைய துணைவியார் இராஜலட்சுமியும், ‘கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக பாய்ஸ் ஸ்கூல் வாசலில் நோட்டு புத்தகங்கள் விற்பனை செய்து வந்ததாகவும், அதில் வந்த வருமானத்தை வைத்து இருந்த ஒரே பெண்ணைபடிக்க வைத்துதிருமணம் செய்து வைத்து விட்டதாக கூறினார்.
தற்போது வயதாகி விட்டதால் வேலை ஏதும் செய்ய முடியாமல், வறுமையில் வாடி வருவதாக தெரிவித்தார் இராமர் தாத்தா. பெண்ணும் திருமணம் செய்து சென்ற இடத்தில் வறுமையில் இருப்பதால் அவராலும் எங்களை கவனித்து கொள்ள முடியவில்லை என்கிறார். 45 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து இன்று மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக தெரிவித்தார்.
முதியோர் ஓய்வூதியம் இல்லை:
தமிழக அரசு முதியோர்களுக்கு கொடுக்கும் 1000 ரூபாய் கேட்டு விண்ணபித்த போது கூட, சொந்த வீடு உள்ளது என்று நிராகரித்து விட்டதாக கூறினார். பூர்வீகத்து வீடு படுக்க கூட போதிய இடமில்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் சொந்த வீடு என்பதை காரணம் காட்டி முதியோர் ஓய்வூதியத்தை நிராகரித்து விட்டதாக கூறினார். அந்த பணம் கிடைத்தால் கூட ஏதோ கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று முதியோர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பங்களை காண்பிக்கிறார்.
வயதாகி விட்டதால் வரும் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம், வறுமை ஒரு பக்கம். விண்ணப்பித்த முதியோர் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. இப்படி வறுமையில் வாழ வழியின்றி தவித்து வரும் முதியோர்களுக்கு மனிதநேயம் கொண்ட எவரேனும் உதவ முன்வர வேண்டும்.
(முதிய தம்பதியருக்கு உதவ விரும்புவோர் 95978 13694, 91507 73550 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.)
செய்தியாளர் : அழகேஸ்வரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pension Plan, Tamilnadu government, Virudhunagar