முகப்பு /விருதுநகர் /

“பாலம் கட்டுங்க தாத்தா.." முதல்வருக்கு கோரிக்கை வைத்த சிவகாசி சிறுமி..

“பாலம் கட்டுங்க தாத்தா.." முதல்வருக்கு கோரிக்கை வைத்த சிவகாசி சிறுமி..

X
முதல்வருக்கு

முதல்வருக்கு கோரிக்கை வைத்த சிவகாசி சிறுமி

Virudhunagar News : சிவகாசியில் சீக்கிரம் பாளம் கட்டுங்க தாத்தா என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்த சிவகாசி சிறுமியின் வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரம் ஓர் தொழில் நகரம். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் காலண்டர்கள் உலக புகழ் பெற்றவை. என்ன தான் தொழில் நகரம் என்றாலும் சிவகாசியில் அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என்றால் கேள்வி தான்? சிவகாசி மாநகராட்சி ஆன பின்பும் நகரில் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

குறிப்பாக தொழிற்சாலைகள் காணப்படும் பகுதிகள் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இங்கு. சாட்சியாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங்கால் ரயில்வே கேட் பூட்டப்படும் போதெல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இங்கு ஒரு மேம்பாளம் அமைக்க வேண்டும் என்று மக்கள் சிவகாசி நகராட்சியாக இருந்த போதிலிருந்து கேட்டு வருகின்றனர். தற்போது சிவகாசி மாநகராட்சியாகி விட்டது இன்னும் பாலம் வரவில்லை என்பது தான் சிவகாசி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

இந்நிலையில், சிவகாசியை சேர்ந்த சிறுமி தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் சிறுமி, “சிஎம் தாத்தா சிவகாசிக்கு சீக்கிரம் பாலம் கட்டித்தாங்க. ட்ராஃபிக் அதிகமாக உள்ளது. நான் டெய்லி ஸ்கூல்க்கு லேட்டா போறேன்” என்று கோரிக்கை வைக்கிறாள். இந்த வீடியோவை தற்போது சிவகாசியை சேர்ந்த இணைய வாசிகள் ஷேர் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Virudhunagar