முகப்பு /செய்தி /விருதுநகர் / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

Sivakasi Fire Accident | விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • Sivakasi, India

விளாம்பட்டி பகுதியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட போது, பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், அறை முழுவதும் வெடித்து தரைமட்டமானது. இதனை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் வியூகம் : திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த கருப்பம்மாள் என்பவர் மீட்கப்பட்டு சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மாரனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Firecrackers, Sivakasi, Virudhunagar