வரும் அக்டோபர் 24ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடைகள் மட்டுமல்லாது பட்டாசுகள் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது உள்ளது.
தீபாவளி 2022:
இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 24 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தமிழகமெங்கும் தீபாவளிக்கு ஆயத்தமாக தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் பட்டாசுகள் விற்பனையும் தொடங்கி விட்டது.
இந்தாண்டு உற்பத்தி குறைவு, மூலப்பொருள் விலையேற்றம், நீதிமன்ற கட்டுப்பாடு போன்றவற்றால் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது சென்ற ஆண்டு ஒருவர் 1,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் இந்தாண்டு அதே பட்டாசை 1,500 க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 50 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது.
ARG crackers கடையின் ஆன்லைன் விற்பனை:
இதனால் விற்பனையில் தொடக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் தற்போது வெளி மாநிலங்களுக்கான ஆன்லைன் ஆர்டர் அதிகரித்திருப்பதால் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என சிவகாசி சாட்சியாபுரம் இரட்டை பாளம் அருகே ARG crackers கடை நடத்தி வரும் பாலவிக்னேஷ் தெரிவித்தார். இது குறித்து அங்கு நேரில் சென்றிருந்த போது தற்போது வெளி மாநிலங்களுக்கான ஆர்டர் வந்து கொண்டிருப்பதாகவும், உள்ளூர் விற்பனை இதுவரை தொடங்கவில்லை என்றும் இனி வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.
60 சதவிகிதம் தள்ளுபடி:
மேலும் இந்தாண்டு வந்துள்ள பட்டாசுகள் மற்றும் அதன் விலை பற்றி விளங்கியவர், வாடிக்கையாளருக்கு இந்தாண்டு வந்துள்ளன தீபாவளிக்கு 60 சதவிகிதம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தள்ளுபடி விலையில் பட்டாசுகள் வாங்க விரும்புவோர் http://www.argpattasukadai.in. என்ற லிங்கை பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம் அல்லது பாலவிக்னேஷ்-ஐ 73737 64447 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.. வாட்ஸ் அப் வாயிலாகவே ஆர்டர் பெற்று உடனுக்குடன் டெலிவரியும் அனுப்பப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire crackers, Local News, Sivakasi, Virudhunagar