ஹோம் /விருதுநகர் /

தீபாவளிக்கு புதுரக பட்டு சேலைகள்.. 30% தள்ளுபடி விலையில்.. தவணை முறையில் சேலைகள்.. அசத்தும் கோ ஆப்டெக்ஸ்..

தீபாவளிக்கு புதுரக பட்டு சேலைகள்.. 30% தள்ளுபடி விலையில்.. தவணை முறையில் சேலைகள்.. அசத்தும் கோ ஆப்டெக்ஸ்..

கோ

கோ ஆப்டெக்ஸ்

Virudhunagar Co Optex Stores | தீபாவளியை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கைத்தறி பட்டு புடவைகள் 30 சதவிகித தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தீபாவளியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவன விற்பனையகங்களில் கைத்தறி பட்டு புடவைகள் 30 சதவிகித தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கோ ஆப்டெக்ஸ் என்பது ஓர் பொதுத்துறை நிறுவனம். இது நேரடியாக நெசவாளர்களிடம் இருந்து துணிகளை கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் உள்ள கோ ஆப்டெக்ஸ் கிளைகள் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இங்கு கையால் செய்யப்பட்ட பட்டு புடவைகள், காட்டன் சேலைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது தீபாவளி நேரம் என்பதால் அதற்கென புதிரக சேலைகள் கோ ஆப்டெக்ஸ் வந்திறங்கியுள்ளன. தீபாவளிக்கென 30 சதவிகித தள்ளுபடியும் அளிக்கப்படுவதால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தாண்டு புதுரகங்களை பற்றி அறிந்து கொள்ள விருதுநகர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள கோ ஆப்டெக்ஸ் கடைக்கு சென்றிருந்த போது இந்த தீபாவளிக்கு வந்துள்ள புதுரக பட்டு சேலைகள் மற்றும் காட்டன் சேலைகள் பற்றி விளக்கினார் விற்பனையாளர் திருமதி கீதா.

கோ ஆப்டெக்ஸ்

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

ரசாயன சாயம் இல்லாத காட்டன் சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், கோயம்புத்தூர் பட்டு சேலைகள் முதலான பல்வேறு ஊர்களில் நெய்யப்பட்ட சேலைகள் வந்துள்ளன. அவை எங்கிருந்து வந்துள்ளன அதை நெய்தது யார் அவர் எத்தனை முறை கை கால்களை அசைத்து இந்த சேலையை நெய்தார் உள்ளிட்ட தகவல்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர சேமிப்பு திட்டம்

கனவு திட்டம்:

மொத்தமாக பணம் கொடுத்து ஒரு சேலை வாங்க முடியாதவர்களுக்கென கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் கனவு திட்டம் எனும் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் குறைந்தது மாதம் 300 ரூபாய் முதல் சந்தாவாக கட்டி ஒரு வருடம் கழித்து அதற்குறிய மதிப்பில் புடவை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இதில் சந்தாதாரர்கள் பத்து மாதம் கட்டினாலோ போதும் மீத இரண்டு மாதங்கள் நிறுவனமே கட்டி அவர்களுக்கு புடவை வழங்கும். இதன் மூலம் நடுத்தர குடும்ப பெண்களும் தங்களின் ஆசைப்படி விலை உயர்ந்த ஒரிஜினல் பட்டு ஆடைகளை வாங்கி பயன்படுத்த முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில்  ஒரு புடவை வாங்கி அணியும் போது நமக்கு எவ்வளவு இன்பம் கிடைக்குமோ அதே இன்பத்தை இந்த புடவையை நெய்த நெசவாளரின் வாழ்விலும் ஏற்படுத்தலாம். ஆதலால்  இந்த தீபவொளி திருநாளுக்கு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகள் வாங்கி நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுஙகள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Virudhunagar