Home /virudhunagar /

சிங்கப்பூர் பறக்கும் சிவகாசி காலண்டர்கள்..  

சிங்கப்பூர் பறக்கும் சிவகாசி காலண்டர்கள்..  

சிவகாசி

சிவகாசி காலண்டர்கள்

Sivakasi Calendars | பட்டாசு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நம்ம ‘குட்டி ஜப்பான்’ சிவகாசி தான் காலண்டர் உற்பத்தியிலும் முன்னிலையில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi | Virudhunagar
2023 புதிய ஆண்டிற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் புது வருட காலண்டர் தயாரிக்கும் பணி சிவகாசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நம்ம ‘குட்டி ஜப்பான்’ சிவகாசி தான் காலண்டர் உற்பத்தியிலும் முன்னிலையில் உள்ளது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதலே காலண்டர் தயாரிக்கும் பணி தொடங்கி விடுகிறது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மாதங்கள் தான் காலண்டருக்கு சீசனே. உள்ளூர் மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, லெபனான் போன்ற வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சிவகாசி காலண்டர்கள்


காலண்டரில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் டைகட்டிங் (Die Cutting) தினசரி காலண்டர். இதன் செய்முறை பற்றி அறிந்து கொள்ள சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ரிஷி காலண்டர்ஸ் சென்ற போது அங்கு காலண்டர் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டமாக நமக்கு எளிதில் புரிய வைக்கப்பட்டது.

சிவகாசி காலண்டர்கள்


டை கட்டிங் காலண்டருக்கெனவே தனி கம்பெனி அமைத்து நடத்தி வரும் அதன் உரிமையாளர் சதிஷ் குமார் பேசுகையில் காலண்டர் தயாரிக்கும் பணியை கடந்த 15 வருடங்களாக செய்து வருவதாகவும், வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப டிசைன் செய்து டை கட்டிங் மாடல் காலண்டர்கள் சப்ளை செய்து வருவதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காலண்டர் ஆர்டர் செய்ய விரும்புவோர் ரிஷி காலண்டர்ஸை 93674 21031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Sivakasi, Virudhunagar

அடுத்த செய்தி