ஹோம் /விருதுநகர் /

சிவகாசி காலண்டரில் QR Code அறிமுகம்.. ஒவ்வொரு நாளுக்கான ஸ்பெஷலை வீடியோவாக காணலாம்..

சிவகாசி காலண்டரில் QR Code அறிமுகம்.. ஒவ்வொரு நாளுக்கான ஸ்பெஷலை வீடியோவாக காணலாம்..

X
QR

QR கோட் கேலண்டர்கள்

QR Calendar : சிவகாசியில் இளைஞர்களைக் கவரும் வகையில் QR கோட் ஸ்கேன் காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

வரப்போகிற புதிய வருடம் 2023க்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இளைஞர்களை கவரும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள QR பார் கோடு ஸ்கேன் செய்யும் காலண்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

QR கோடு காலண்டர் :

இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகின்றனர் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள்.

இந்த பார் கோடு காலண்டரில் என்ன சிறப்பு என்றால் நாள்காட்டியில் பார் கோடு கொடுக்கப்பட்டிருக்கும். அதை நம்முடைய மொபைலில் ஸ்கேன் செய்தால் அதில் அன்றைய நாளை பற்றிய வீடியோ ப்ளே ஆகும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மதுரை பள்ளி மாணவிக்கு கடிதம் அனுப்பிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - காரணம் என்ன தெரியுமா?

உதாரணமாக ஆகஸ்ட் 15ம் தேதியை ஸ்கேன் செய்தால் அதில் இந்திய சுதந்திர தினத்தை பற்றிய வீடியோ வரும். இதே போல 365 நாட்களுக்கும் பார் கோடு கொடுக்கப்பட்டுள்ளது.

இது டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வு எழுதுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் சிவகாசி கற்பகா காலண்டர்ஸ் உரிமையாளர் மகரிஷ் குமார். இதற்காக தனியாக 6 மாதம் உழைத்து, 365 நாட்களுக்கும் வீடியோக்களை திரட்டி இந்த காலண்டரை தயாரித்துள்ளதாக கூறினார்.

இந்த ஐடியா எப்படி வந்தது என்று கேட்டபோது ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் தயாரிப்பில் எதாவது புதுமை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம் என்றார். மேலும் இந்த ஆண்டு சாதாரண காலண்டர்களை விட இந்த காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

டிஜிட்டல் உலகில் அனைத்தும் டிஜிட்டல்மயமாகி வருது போல இன்று வந்துள்ள இந்த காலண்டரும் அதன் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. QR பார் கோடு ஸ்கேன் செய்யும் காலண்டர்களை பெற விரும்பினால் 97509 32482 என்ற எண்ணில் கற்பகா காலண்டர்ஸை தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar