ஹோம் /விருதுநகர் /

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிவகாசி மக்களின் பங்களிப்பு..

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிவகாசி மக்களின் பங்களிப்பு..

சிவகாசி

சிவகாசி - கேக் அட்டை தயாரிப்பு

Christmas | கிறிஸ்துமஸ் கேக் வைக்க பயன்படும் அட்டைகள் சிவகாசியில் தான் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

சிவகாசி மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து முக்கிய பண்டிகைகளிலும் நம் சிவகாசி மக்களின் உழைப்பு கண்டிப்பாக இருக்கும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தீபாவளி என்றால் சிவகாசி பட்டாசுகள், புத்தாண்டு என்றால் சிவகாசி காலண்டர்கள் இவ்வளவு ஏன் இரண்டுக்கும் இடையில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையிலும் கூட இம்மக்களின் பங்களிப்பு உள்ளது.

கிறிஸ்துமஸ் கேக் வைக்க பயன்படும் அட்டைகள் சிவகாசியில் தான் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டதால் கேக் அட்டைகள் எப்படி தயார் செய்யப்படுகிறது என தெரிந்துகொள்ள சிவகாசி அருகே திருத்தங்களில் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ப்ரீத்தி இம்பெல்லக்ஸ் நிறுவனத்திற்கு சென்றபோது, நிறுவன உரிமையாளர் ரவி அட்டைகள் தயாரிக்கும் முறை பற்றி நமக்கு விளக்கினார்.

இதையும் படிங்க : சமத்துவபுரம் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கேக் அட்டைகள் தயார் செய்ய முதலில் பேப்பர் மில்களில் தயாரிக்கப்பட்ட அட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் அதன் மேல் கேக் வைக்கும் வகையில் லேமினேசன் செய்யப்பட்ட தாள்களை ஒட்டி தயார் செய்கின்றனர். இதில் வாடிக்கையாளரின் நிறுவன பெயரையும் பிரின்ட் செய்து தருகின்றனர்.

மேலும் படிக்க:  மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

ஒட்டிய அட்டைகளை கம்ப்ரஸ் செய்து நன்கு காய வைக்கின்றனர். இதனால் லேசான அட்டைகள் சற்று வலு பெறுகின்றன. பின்னர் இந்த அட்டைகளை வாடிக்கையாளர் தேவைக்கேற்ப சதுர வடிவிலோ, வட்ட வடிவிலோ வெட்டி தருகின்றனர். அட்டையின் அளவு கேக்கை பொருத்தது என்கின்றனர். தற்போது அரைக்கிலோ முதல் 5 கிலோ கேக்கிற்கான அட்டைகள் தயார் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அதன் உரிமையாளர் ரவி தாங்கள் தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் அட்டைகளை பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து வருவதாகவும், ஆன்லைன் ஆர்டர்கள் எடுத்து அனுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கேக் அட்டைகள் ஆர்டர் செய்ய விரும்புவோர் 97877 20387 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Published by:Karthi K
First published:

Tags: Christmas, Local News, Virudhunagar