ஹோம் /விருதுநகர் /

உடைந்த ஷட்டர்கள்.. வீணாகி வரும் விருதுநகர் ஆனைக்குட்டம் அணை நீர்.. விவசாயிகள் வேதனை..

உடைந்த ஷட்டர்கள்.. வீணாகி வரும் விருதுநகர் ஆனைக்குட்டம் அணை நீர்.. விவசாயிகள் வேதனை..

விருதுநகர்

விருதுநகர் ஆனைக்குட்டம் அணை

Virudhunagar Anaikuttam Dam | விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அர்ச்சுனா நதியின் குறுக்கே பாசன பயன்பாட்டிற்காக ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு கடந்த 1985ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்களில் லீக்கேஜ் பிரச்சனை காரணமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகாசி அருகே அர்ச்சுனா நதியின் குறுக்கே பாசன பயன்பாட்டிற்காக ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு கடந்த 1985ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மொத்தமாக 7.50 மீட்டர் உயரம் 125.75 மீட்டர் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுற்றியுள்ள 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அனை விருதுநகர் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

விருதுநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணையின் நீர் வழிப்பாதையில் 12 உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீரானது கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் படிக்க: சிவகாசி பெயர் காரணமும் இங்கிருக்கும் சிவன் கோவிலின் சிறப்புகளும் - சுவாரஸ்ய தகவல்கள்!

ஷட்டர்கள் பழுது:

இந்த நிலையில் அணையின் தரமற்ற கட்டுமான பணி காரணமாக ஷட்டர்கள் பழுது ஏற்பட்டு நீண்ட காலமாக நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது ஏற்கனவே நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி 7.5 மீட்டர் உயரம் கொண்ட அணையில் 4.5 மீட்டர் உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

ஆனைக்குட்டம் அணை

இந்த நிலையில் ஷெட்டர் லீக்கேஜ் காரணமாக தண்ணீர் வெளியேறி வருவதால் 4.5 மீட்டர் தண்ணீரையும் தேக்க முடியாத சுழலே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது ஆனால் உடைந்த ஷட்டர்கள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆனைக்குட்டம் அணை

மேலும் படிக்க:  மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் பற்றிய அறியப்படாத தகவல்கள்..!

இது குறித்து ஆனைக்குட்டம் கிராமத்தை சேர்ந்த பாணடி பேசுகையில், அணையில் மூன்று ஷெட்டர்கள் பழுதாகி உள்ள காரணத்தால், கடந்த பத்து நாட்களாக பெய்த மழைநீர் முழுவதும் வெளியேறி வருகிறது. பாசன பயன் பாட்டிற்கு நீரை தேக்க முடியாத சுழல் காணப்படுவதாகவும் , இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனைக்குட்டம் அணை

இது தொடர்பாக ஆனைக்குட்டம் அணையின் உதவி செயற்பொறியாளர் சுந்தரலட்சுமி அவர்களை தொடர்பு கொண்ட போது, அணையின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,ஷட்டர் லீக்கேஜ் பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மழைக்காலத்தில் அவ்வப்போது இந்த ஷட்டர் லீக்கேஜ் பிரச்சனை பற்றி பேசுவதும் பின்னர் மறந்துவிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar