தொழில் நகரான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாளொரு புதிய தொழில்கள் வளர்ந்து வரும் சுழலில், சிலர் தன்னிடம் இருக்கும் திறனை மூலதனமாக கொண்டு தொழில் தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் சாக்பீஸ் கொண்டு கலைப்பொருட்கள் செய்வதையே பகுதி நேர தொழிலாக மாற்றியுள்ளார் சிவகாசியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான ஶ்ரீதர்.
சிறுவயதில் வகுப்பறையில் சாக்பீஸ் கொண்டு விளையாடும் போது அதிலே சின்ன பொருட்கள் செய்து பார்த்த போது அது மிகவும் அழகாக இருந்ததால், அதிலே தொடர்ந்து ஈடுபட்டு தற்போது சாக்பீஸ் கொண்டு திருமணங்களுக்கு பரிசாக கொடுக்கும் கலைப்பொருட்கள் மற்றும் குட்டி சேர் , குட்டி சோபா போன்ற மினியேச்சர் பொருட்கள் செய்து வருகிறார்.
கலைப்பொருட்கள் செய்வதோடு மட்டும் இல்லாமல் அதையே தொழிலாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள மாணவர் ஶ்ரீதர், தற்போது சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தையே இதற்கான அலுவலகமாக மாற்றி தேடி வருபவர்களுக்கு அவர் விரும்பிய வடிவில் கலைப்பொருட்கள் செய்து கொடுத்து பகுதி நேர வருமானம் ஈட்டி வருகிறார்.
மாணவர் ஶ்ரீதரின் செயல்களை பார்த்த சில நண்பர்கள் தற்போது அவரிடம் வந்து சாகபீஸ்ஸில் கலைப்பொருட்கள் செய்ய பயிற்சி பெற்று வருகின்றனர். தன்னுடைய திறமை தனக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இந்த மாணவரின் செயல் நிச்சயம் பாராட்டத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாணவர் ஶ்ரீதரை வாழ்ந்த விரும்புவோர் 86680 01014 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar